மாசில்லா ராஜபாளையம்... பசுமை வளர்க்கும் அமைப்பு
Added : மார் 26, 2018 00:52
ராஜபாளையத்தில் மரங்கள் வெட்டப்பட்டு பசுமை மறைந்து, கான்கிரீட் கட்டடங்களாக மாறி வரும் நிலையில் பசுமை நகராக மாற்ற ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் ஈடுபட்டு விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
முன்பு, மாவட்டத்தின் பல பகுதியில் குடிநீர், விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போதும் ராஜபாளையத்தில் மழைப்பொழிவு இருக்கும். குடிநீர், விவசாயத்திற்கு பற்றாக்குறை ஏற்படாது. இதற்கு மரம் வளர்ப்பு காரணமாக இருந்தது என்பதை தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் மக்கள் உணர்ந்து உள்ளனர். மரங்களின் அருமை தெரியாமல் அவற்றை வெட்டி வீடுகளாக்கி விட்டனர். இதனை சமன் செய்ய மரக்கன்றுகளை நட்டு பசுமையாக நகரை மாற்றுவது என ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.வனத்துறையுடன் இணைந்து உலக வனநாள், தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் மரக்கன்று வழங்கி, பராமரிக்க நகரில் உள்ள தன்னார்வ அமைப்புகளோடு செயல்பட்டு வருகிறது. இவர்களின் பணியால் ராஜூக்கள் கல்லுாரிபசுஞ்சோலையாக மாற்றம் கண்டுள்ளது.
மரக்கன்றுக்கு பெயர்இயற்கையை சமன்படுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். மாணவ, மாணவிகள் பெயரில் மரக்கன்று நட்டு அவர்களின் பெயரை கன்றுகளுக்கு சூட்டுகிறோம். இதனால் தனது மரம் என்ற உரிமையும், பாதுகாப்பதில் அக்கறை அதிகரிக்கிறது. மரங்களை சேதபடுத்துவோருக்கு எதிராக கூட்டம், இயற்கை ஆர்வலர்களை வைத்து கருத்தரங்கு நடத்தி வருகிறோம்.- வெங்கட்ராமன், கல்லுாரி முதல்வர்.
இயற்கை பாதுகாப்புகல்லுாரியில் நுழைந்ததும் அனைவரையும் வரவேற்பது பசுமையான மரங்கள்தான். அமைதியான சூழல், காற்றோட்டம், வெயில் காலத்திலும் கண்களுக்கு குளுமை ஏற்படும். இத்தகைய பணிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தோடு இணைந்துள்ளோம். இப்பணியை சுற்று பகுதி மக்களுக்கும் விரிவுபடுத்தும் நோக்கத்தில் தொடர்ந்து செய்து இயற்கையை பேணி காப்போம்.- சுரேஷ், மாணவர்.

No comments:
Post a Comment