Wednesday, March 28, 2018

ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது எப்போது

Added : மார் 28, 2018 02:07

மதுரை: தமிழக அரசு அறிவித்தபடி அடையாள அட்டைகள் வழங்குவது எப்போது என ஓய்வூதியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஆறு லட்சம் பேர் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் 48 ஆயிரம், மதுரை மாவட்டத்தில் 45 ஆயிரம் ஓய்வூதியர் உள்ளனர். கடந்த செப்டம்பரில் ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஓய்வூதிய புத்தகத்தை இவர்கள் அடையாளமாக அலுவலகங்களில் காட்டுகின்றனர். அதை தவிர்க்க அடையாள அட்டை வழங்கப்படுவதாக அரசு குறிப்பிட்டது. இதுவரை அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை.மூத்த குடிமக்கள், ஓய்வூதியர்கள் நலச்சங்க தலைவர் காளிதாஸ் கூறியதாவது: அடையாள அட்டை குறித்து தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஏமாற்றமே மிஞ்சியது. கருவூல அலுவலகங்களில் ஊழியர் பற்றாக்குறையால் ஓய்வூதிய பலன்களை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும். மதுரையில் ஓய்வூதிய அலுவலகம் அமைக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...