Wednesday, March 28, 2018


மருத்துவ மேற்படிப்பு : 'வெயிட்டேஜ் மார்க்' எதிராக வழக்கு

Added : மார் 28, 2018 00:41

மதுரை: மருத்துவ மேற்படிப்பில், 'வெயிட்டேஜ்' நிர்ணயித்து ெவளியிடப்பட்ட அரசாணையை எதிர்த்து, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் எழுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய உதவி டாக்டர் சுசீபிரதீப் உட்பட, 6 பேர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: முதுகலை மருத்துவ மேற்படிப்பு சேர்க்கைக்கு, 'நீட்' தேர்வு எழுதினோம். மலைப்பகுதி, பின்தங்கிய பகுதிகள், கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவோர் என, பல்வேறு வகைப்படுத்தி, கூடுதலாக, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்குவது குறித்து, தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர், மார்ச், 9 ல், அரசாணை வெளியிட்டார். பணிபுரியும் பகுதிகளை பாகுபடுத்தி, 'வெயிட்டேஜ்' நிர்ணயித்தது தவறு. அரசாணையில் விதிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை. அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதி, வி.பாரதிதாசன் முன், மனு விசாரணைக்கு வந்தது. தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர், இந்திய மருத்துவக் கவுன்சில் செயலர், மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஏப்.,4 க்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...