Wednesday, March 28, 2018

ரூ.350 நாணயம் வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

Added : மார் 28, 2018 07:39




புதுடில்லி: குருகோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு ரூ.350 நாணயத்தை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: குருகோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாளையொட்டி, ரூ.350 நாணயம் வெளியிடப்பட உள்ளது. 44 மி.மீ., விட்டத்தில், 35 கிராம் எடையில் இந்த நாணயம் உருவாக்கப்படும். இதில் 50 சதவீதம் அலாய் சில்வர், 40 சதவீதம் செம்பு மற்றும் 5 சதவீதம் துத்தநாகம் சேர்க்கப்பட்டிருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...