Thursday, March 29, 2018

கோவை- ராஜபாளையம்- செங்கோட்டைக்கு நேரடி சிறப்பு ரயில்: பயணிகள் வரவேற்பு

By விருதுநகர் | Published on : 29th March 2018 07:54 AM |


கோவை-ராஜபாளையம்- செங்கோட்டை சிறப்பு ரயில் பாலக்காடு வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை ரத்துசெய்து அட்டவணையில், நேர்வழியில் செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளதை பயணிகள் வரவேற்றுள்ளனர்.

இந்த ரயில் கோவையிலிருந்து புறப்பட்டு பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக செங்கோட்டை செல்வதாக இருந்தது. தற்போது வெளியிட்டுள்ள அட்டவணையில் கோவையிலிருந்து நேரடியாக செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஏப்ரல் 9, 16, 23, 30, மே 7, 14, 21, 28 ,ஜூன் 4, 11, 18, 25, ஜூலை 2 தேதிகளில் கோவையில் இரவு 11.50க்கு புறபட்டு, விருதுநகருக்கு காலை 6.38 மணிக்கும், ராஜபாளையத்துக்கு 7.50 மணிக்கும் வந்து செங்கோட்டை செல்கிறது.

மறுமார்க்கத்தில் ஏப்ரல் 10, 17, 24, மே 1, 8, 15, 22, 29 ஜூன் 5, 12, 19, 26 ஜூலை 3-இல் செங்கோட்டையில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு, ராஜபாளையத்துக்கு 6 .28 மணிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு 6.43 மணிக்கும், சிவகாசிக்கு இரவு 7 மணிக்கும், திருத்தங்கலுக்கு 7.08 மணிக்கும், விருதுநகருக்கு 7.28 மணிக்கும் வந்து கோவைக்கு அதிகாலை 4.30 மணிக்கு செல்கிறது.

கோடை விடுமுறைக்காக விடப்பட்ட இந்த ரயிலுக்கு தற்போது முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்த ரயில் நேர்வழியில் இயக்கப்படுவதை அறிந்து நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்ட பயணிகள் வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...