Tuesday, March 27, 2018

உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியர்களுக்கு வேண்டுகோள்

Added : மார் 27, 2018 02:48


சென்னை: தமிழக அரசின் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், கருவூலங்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலங்களில், ஏப்ரல், 2 முதல், ஜூன், 29 வரை, நேரில் ஆஜராகி பதிவு செய்ய வேண்டும். நேரில் செல்ல முடியாதவர்கள், உயிர் வாழ் சான்றிதழை அனுப்ப வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கருவூல கணக்குத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது: * ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டத்தில், ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமலேயே, அரசின், இ - சேவை மையங்களில், www.jeevanpramaan.gov.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்கு, 2017 முதல் வழிவகை செய்யப்பட்டுள்ளது* கருவூலங்களுக்கு நேரில் செல்ல முடிந்த ஓய்வூதியர்கள், ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், ரேஷன் கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு எண் சமர்பிக்காமலிருந்தால், அவற்றின் நகல்களுடன், தங்களின் ஓய்வூதிய எண்ணையும் குறிப்பிட்டு, சமர்பிக்க வேண்டும். ஓய்வூதிய புத்தகத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும்* நேரில் செல்ல இயலாத ஓய்வூதிவர்கள், www.tn.gov.in/karuvoolam என்ற இணையதளத்தில், உயிர் வாழ் சான்றிதழ் படிவத்தை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில், ஓய்வூதிய வங்கி கணக்கு உள்ள, வங்கி கிளை மேலாளர், அரசிதழ் பதிவு பெற்ற, மத்திய, மாநில அரசு அலுவலர்கள், தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் அலுவலர் ஆகியோரில், யாரேனும் ஒருவரிடம், சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்* வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள், வெளிநாட்டில் உள்ள மாஜிஸ்திரேட், நோட்டரி பப்ளிக், வங்கி மேலாளர் அல்லது இந்திய துாதரக அலுவலரிடம், உயிர் வாழ் சான்று பெற்று, சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்* ஓய்வூதியர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு, இதுவரை விண்ணப்பம் அளிக்காதவர்கள், கருவூலத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...