Thursday, March 29, 2018

சென்னை - கொல்லம் நாளை முதல் ரயில் சேவை : எட்டு ஆண்டுகளுக்குப்பின் துவக்கம்

Added : மார் 29, 2018 01:52 

  எட்டு ஆண்டுகளுக்கு பின், சென்னையில் இருந்து, கேரளா மாநிலம் கொல்லத்திற்கு, நாளை முதல், மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்குகிறது.செங்கோட்டை -- புனலுார் இடையே, 112 ஆண்டுகள் பாரம்பரியமிக்க, 50 கி.மீ., மீட்டர் கேஜ் பாதை, 358 கோடி ரூபாய் செலவில், அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள், 2010, செப்., 20ல் துவங்கின. இப்பாதையில், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இப்பாதையில், செங்கோட்டை - புது ஆரியங்காவு; எடமன் - புனலுார் இடையே, 2017ல் பணி முடிந்து, ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இப்பாதையில், புது ஆரியங்காவு - எடமன் இடையே பாதை பணி நடந்து வந்தது. செங்கோட்டை - புனலுார் ரயில் பாதை, மலைகளில் அமைக்கப்பட்டுள்ளதால், பணிகளை முடிக்க, எட்டு ஆண்டுகளாகி விட்டன.

இப்பாதையில், பணிகள் நிறைவடைந்ததால், புது ஆரியங்காவு - எடமன் இடையே, தென்பிராந்திய ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், ஒரு மாதத்திற்கு முன், விரைவு ரயில் இயக்கி சோதனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, பயணியர் ரயில் இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், இப்பாதையில், எட்டு ஆண்டுகளுக்கு பின், நாளை மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்குகிறது.சென்னை - கொல்லம் முதல் சிறப்பு ரயில், தாம்பரத்தில் இருந்து, நாளை மாலை, 5:30 மணிக்கு புறப்பட்டு, விருத்தாசலம், திருச்சி, மதுரை, ராஜபாளையம் வழியாக மறுநாள் அதிகாலை, 5:50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். செங்கோட்டையில் இருந்து காலை, 6:00 மணிக்கு புறப்பட்டு, 10:30 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லத்தில் இருந்து, வரும், 31ம் தேதி, மதியம், 1:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள், அதிகாலை, 5:05 மணிக்கு, தாம்பரம் வந்தடையும்.இந்த ரயில்பாதை திறக்கப்பட்டுள்ளது, சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...