Tuesday, March 27, 2018

முதுநிலை மருத்துவ படிப்பு 9,848 பேர் விண்ணப்பம்

Added : மார் 27, 2018 00:31

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, 9,848 பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில், அரசு மற்றும், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மார்ச், 17ல், துவங்கியது. விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய, நேற்று முன்தினமும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்பிக்க, நேற்றும் கடைசி நாள்.இந்நிலையில், தேர்வு குழுவினரிடம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை கணக்கிடும் பணி, நேற்று மாலை நடந்தது.

தேர்வு குழு செயலர், செல்வராஜ் கூறுகையில், ''முதுநிலை மருத்துவ படிப்பிற்கு, 9,848 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றை பரிசீலிக்கும் பணி நடந்து வருகிறது. ''விரைவில், கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும். இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதி இறுதியானதும், படிப்பிற்கு உள்ள மொத்த இடங்கள் தெரிய வரும்,'' என்றார்.

டாக்டர்கள் போராட்டம் : அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர, தொலைதுார மற்றும் கடினமான பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு, சலுகை மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு சாரா டாக்டர்கள், சென்னை, சேப்பாக்கத்தில், நேற்று போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து, சங்கத்தின் செயலர், டாக்டர் கார்த்திகேயன் கூறுகையில், ''அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்க, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. இது, எம்.சி.ஐ., என்ற, இந்திய மருத்துவ கவுன்சில் விதியை மீறிய செயல். எனவே, எம்.சி.ஐ., விதிப்படி, சலுகை மதிப்பெண் அளித்து, கவுன்சிலிங் நடத்த வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...