வங்கிகளுக்கு, நாளை மறுநாள் முதல், நான்கு நாட்களுக்கு விடுமுறை வருவதால், தமிழகத்தில், பணப்புழக்கம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
27.03.2018
மூன்று நாள் தொடர் விடுமுறை
'ஏடிஎம்' மையங்களிலும், பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், மக்கள் மற்றும் மாத சம்பளதாரர்களின் பாடு திண்டாட்டமாகும் என, தெரிகிறது.தமிழகத்தில், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் துறை வங்கிகளின், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளும்; 30 ஆயிரத்துக்கும் அதிகமான, 'ஏடிஎம்' என்ற, தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்களும் உள்ளன. அவற்றில், தினமும் பல நுாறு கோடி ரூபாய் அளவுக்கு, பண பரிவர்த்தனை நடக்கிறது. மத்திய அரசு, 2016 நவம்பரில், செல்லாத நோட்டு அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து, வங்கி வாயிலாகவே, பலரும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.
இதனால், வங்கிகளுக்கு, இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வந்தால், மக்களின் பண பரிவர்த்தனை பாதிக்கிறது.
'ஏடிஎம்' இயந்திரங்களில், குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே, பணம் நிரப்ப முடியும் என்பதால், தொடர் விடுமுறையின் போது, அந்த இயந்திரங்களில் நிரப்பப்படும் பணம், ஒரு நாளில்எடுக்கப்பட்டு விடும்.
ரிசர்வ் வங்கி கடிதம்
மற்ற விடுமுறை நாட்களில், பணம் இல்லாமல், ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பட முடியாத நிலைமை ஏற்படும்.இதையடுத்து, வங்கிகளுக்கு, தொடர் விடுமுறை வரும் போது, சிலர்செலவுக்கு தேவையான பணத்தை, முன்கூட்டியே எடுத்து வைத்து கொள்வர். வரும், 29ல், மகாவீர் ஜெயந்தி; 30ல், புனித வெள்ளி என, இரு நாட்களுக்கு தொடர் விடுமுறை. அடுத்து, 31ம் தேதி வங்கிகள் செயல்படும்.வங்கிகளின், ஆண்டு கணக்கு முடிவுக்காக, ஏப்., 1ஐ,விடுமுறை நாளாக, தமிழக அரசு அறிவித்திருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமைஎன்பதால்,ஏப்., 2ம் தேதியை, விடுமுறைநாளாகஅறிவிக்கும்படி, தமிழக அரசுக்கு, ரிசர்வ் வங்கி கடிதம் அனுப்பியது. அதைஏற்று,அன்றைய தினம்,அனைத்து வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்குவிடுமுறை அறிவித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.
மற்ற சமயங்களில், வங்கி தொடர் விடுமுறை நாட்கள், மாதத்தின் இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் வரும். முதல் வாரத்தில், வங்கியில் இருந்து எடுத்த சம்பளம், பலரின்
கையிலும் இருக்கும் என்பதால், பணப்புழக்கம் பாதிக்காது. தற்போது, மாத இறுதி மற்றும் சம்பள நாளில், வங்கிகளுக்கு, அடுத்தடுத்து விடுமுறை வருகிறது. இதனால்,மக்களும், சம்பளதாரர்களும், பணம் இன்றி திண்டாட வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது.
வரும், 31ம் தேதி, வங்கி வேலை நாள் என்றாலும், 29ம் தேதியில் இருந்து, ஏப்., 2 வரை, வங்கி நடவடிக்கைகள் முடங்கி விடும் என்றே, பலரும் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில், 31ம் தேதி சனிக்கிழமை என்பதால், அரசு உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு விடுமுறை. அதனால், அந்நிறுவன ஊழியர்களுக்கான சம்பள பணத்தை, வங்கியில் செலுத்த முடியாது. அவர்கள், ஏப்., 3ம் தேதி வரை, சம்பளத்துக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:
ஒரு வங்கி ஏடிஎம் இயந்திரத்தில், ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம், மூன்று லட்சம் ரூபாயும், சென்னையில், குறைந்தபட்சம், 10 லட்சம் ரூபாயும் நிரப்பப்படுகிறது. சில பகுதிகளில், அதிகபட்சமாக, 20 லட்சம் ரூபாய் வரை நிரப்பப்படுகிறது. இந்த பணம், ஒரே நாளில், வாடிக்கையாளர்களால் எடுக்கப்பட்டு விடும்.அதனால், 29ம் தேதி துவங்கும் விடுமுறை நாட்களில், சனி, ஞாயிறு வருவதால், அந்த இரண்டு நாட்களில், எல்லா பணமும் எடுக்கப்பட்டு விடும். அதன்பின், ஏடிஎம் இயந்திரங்களில், பணம் நிரப்பப்படாது என்பதால், ஏப்., 1, 2ம் தேதிகளில், பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்படலாம். அதற்கேற்ப, வாடிக்கையாளர்கள், தங்கள் செலவுகளை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -
No comments:
Post a Comment