Friday, March 30, 2018

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை

Added : மார் 30, 2018 02:52



புதுடில்லி : ரயில்வே ஊழியர்களுக்கு முதல் முறையாக, எல்.டி.சி., என அழைக்கப்படும், விடுப்புடன் கூடிய பயணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

பணியாளர், பொதுமக்கள் புகார்கள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விதிமுறைகளின்படி, ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது துணைக்கு, இலவச பாஸ் வழங்கப்படுவதால், எல்.டி.சி., வசதியை பெற உரிமை இல்லை.

ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, தற்போது, இவர்களுக்கும், எல்.டி.சி., வசதி பெற வகை செய்யப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் ஆலோசனைப்படி, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ரயில்வே ஊழியர்களுக்கு இந்த வசதியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்கள், எல்.டி.சி., வசதியை பெறும்போது, அந்த ஆண்டுக்கான இலவச பாஸ் அல்லது சலுகை கட்டணம் வசதியை பயன்படுத்த முடியாது. சொந்த ஊருக்கு செல்வதற்கும், எல்.டி.சி.,யை பயன்படுத்த முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...