Monday, July 2, 2018

சென்னையில் காற்று கூட காசுக்கு கிடைக்கும்

By DIN  |   Published on : 01st July 2018 06:36 PM 

இந்திய அரசு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தில்லி மக்கள் சுமார் 1 ஆண்டுக்குப் பிறகு 2 நாட்களுக்கு முன்னர்தான் சுத்தமான காற்றை சுவாசித்துள்ளனர் என்ற தகவல் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், கடந்த 1 ஆண்டாக அவர்கள் சுவாசித்த காற்றின் விளைவு நிச்சயம் வரும் நாட்களில் வெளிவரும். 

இந்திய நகரங்களில் அதிகம் மாசு அடைந்த நகரங்களில் சென்னையும் முக்கிய இடம் வகிக்கிறது. வரும் நாட்களில் தில்லி மக்கள் சந்தித்த அந்த நிலையை சென்னை உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்களும் சந்திக்கும் நிலைமை எவ்வளவு தொலைவில் உள்ளது என்று தெரியவில்லை. ஆனால், நாள்தோறும் உயரும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, வாகனங்களின் எண்ணிக்கை நிச்சயம் அந்த இடத்தை அடையச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. 

அதற்கு தயாராவதற்கு சுற்றுச்சூழல் மாசை தடுப்பது ஒரு வழி. அந்த நிலை வந்த பிறகு, அதனை எதிர்கொள்வதற்கான புதிய முறை கண்டுபிடிப்பது 2-ஆவது முறை.

அந்த 2-ஆவது முறை தற்போது சென்னைக்கு வந்துள்ளது. சர்வதேச அரங்கில் ஒரு சில நாட்களில் இந்த நிலை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டாலும் சென்னைக்கு இது முதன்முறை.

அதாவது, சுத்தமான காற்றை காசு கொடுத்து பெறுவது. சென்னையில், சுத்தமான காற்றை கேன்களில் அடைத்து விற்கப்படும் வழக்கம் புதிதாக தொடங்கியுள்ளது. ஒரு கேன் தற்போதைய நிலையிலேயே 600 ரூபாய் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. 

காற்றை காசு கொடுத்து வாங்குவதா என்று இன்றைக்கு நாம் ஆச்சரியமாக கேட்கலாம். ஆனால், இதே ஆச்சரியத்துடன் தான் தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதாக என்று நாம் முன்பு கேட்டுள்ளோம். தற்போது, தண்ணீரை பாட்டில்களாகவும், கேன்களாகவும் சாதாரணமாக வாங்கி வருகிறோம். 

இதே நிலை தான் நாளை காற்றுக்கும்.

திருப்பதி செல்வோர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்!

Published on : 30th June 2018 12:00 PM  | 
திருமலை திருப்பதியில் உள்ள எழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் 16-ம் தேதி மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. 

ஏழுமலையான் கோயிலில் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அஷ்ட பந்தன மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றது. 

ஆகஸ்ட் 11-ம் தேதி அங்குரார்ப்பணம் நடைபெற உள்ளது. மகாசம்ப்ரோக்ஷணத்திற்கு கங்கண பட்டராக தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் செயல்படுவார். அவருடன் 44 வேத விற்பன்னர்கள், 100-க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள், பிரபந்த பண்டிதர்கள், வேத பாடசாலை மாணவர்கள் பங்கு கொள்ள உள்ளனர். 

இதையடுத்து, ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகள், விஐபி பிரேக் தரிசனம், பரிந்துரைக் கடிதங்களுக்கான தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

விஐபிகளுக்கு மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் தரிசனம் வழங்கப்படும். ஆகஸ்ட் 15-ம் தேதி மகாசாந்தி திருமஞ்சனம், 16-ம் தேதி காலை 10.16 மணிக்கு துலா லக்கினத்தில் மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. அதன்பின், தொடர்ந்து 48 நாட்கள் அதாவது ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.

மகாசம்ப்ரோக்ஷண நாள்களில் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஒரு நாளுக்கு 35 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனம் வழங்கப்படும் என்று தேவஸ்தான செயல் இணை அதிகாரி  சீனிவாச ராஜு தெரிவித்துள்ளார்

ஒரு ஆண்டுக்கு 730 ஜி.பி 1,999 தான் : பிஎஸ்என்எல் புதிய சலுகை

சென்னை: 1,999க்கு ஒரு வருடத்திற்கு 730 ஜி.பி டேட்டாவும், அன்லிமிடெட் தொலைபேசி அழைப்பையும் வழங்கும் புதிய சலுகையை பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.   இதுகுறித்து, பிஎஸ்என்எல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வட்டத்தில் ‘எஸ்.டி.வி 1999’ என்ற ஒரு வருட புதிய சலுகையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்துகிறது.   அதன்படி, சென்னை தொலை தொடர்பு வட்டம் மற்றும் தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டம் ஆகிய இரண்டிற்கும் இந்த சலுகை பொருந்தும். 1,999 செலுத்தி 730 ஜி.பி டேட்டாவை ஒரு வருடத்துக்கு பெற்றுக்கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 2 ஜி.பி என கணக்கீடு செய்யப்படுகிறது. இதேபோல், அளவில்லா குரல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் இதுபோன்ற சலுகையை கொடுத்தது இல்லை. இந்த சலுகை வரும் செப்டம்பர் 22ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்த திட்டத்தின்படி தனிநபர் ஒருவருக்கு அளவில்லா அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா ஆகியவற்றை உள்ளடக்கி 5.50 பைசா மட்டுமே நாள் ஒன்றுக்கு செலவாகும். ஓராண்டுக்கு 36,500 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது அதிக நேரம் தொலைபேசியில் பேசுபவர்களுக்கும், நீண்ட நாட்கள் வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது

MBBS Counselling

MBBS counselling: 40 seats allotted on Day 1


SPECIAL CORRESPONDENT

CHENNAI, JULY 02, 2018 00:00 IST


For 125 seats allocated for persons with disability, less than 30 applications received


The first phase of counselling for medical and dental seats under state quota began on Sunday for candidates in special categories.


A total of 40 seats, including 38 in medical colleges and two in dental, were allotted.

Though 125 seats were allocated for persons with disability, less than 30 applications were received by the selection committee of the Tamil Nadu Dr. MGR Medical University.

Candidates

A total of 103 candidates were invited for counselling on Sunday, including 60 in the ex-servicemen category and 15 in the eminent sportspersons category.

K. Priya, a basketball player from Coimbatore, who chose to be waitlisted, was upset that despite taking NEET this year and scoring 360 marks in the sports category, she was not able to get a seat.

“Puducherry has allocated 1% of seats and other States have set aside 0.5% of total seats for sports category, but in Tamil Nadu only 0.09% seats are for sportspersons.

“I could not attend a match this year as on the same day I had to appear for NEET. Had I played I would have scored higher marks,” she lamented.

For some like R. Dhanalakshmi of Manali, daughter of a timber shop owner, it was a wait-and-watch situation.

She had set her heart on becoming a doctor, but had not scored enough in NEET last year.

This year, with a score of 263 the candidate, who is certified 60% disabled, was disappointed that her name did not figure in the list.

However, after evaluation by a team of doctors, she was permitted to attend counselling.

She was allotted a seat in Kilpauk Medical College. A. Vinoth Kumar, who has lower limb disability, and a NEET score of 269, was permitted to attend counselling after being reassessed by doctors.

He was allotted a seat in Thanjavur Medical College.

Selection committee secretary G. Selvarajan said 90 seats were added to the general pool on Sunday after the Medical Council of India approved the intake of seats in Dhanalakshmi Srinivasan Medical College.

You tube new application

யூடியூப்’பில் வந்துள்ள புது வசதி!


யூடியூப்பின் ரெட் சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட வந்த பிப் (PiP) வசதி, 
தற்போது அமெரிக்காவில் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான யூடியூப் கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு ஓரியோ பயனர்களுக்கு பிப் எனப்படும் `Picture-in-Picture ' வசதியை அறிமுகம் செய்தது. அப்போது இந்தச் சேவையானது யூடியூப் ப்ரீமியம் பயனர்கள் மற்றும் ரெட் சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டுமே இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் ஆண்ட்ராய்டு ஓரியோ பயனர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த `Picture-in-Picture ' வசதியில் என்ன விசேஷம் என்றால் ஒரே சமயத்தில் இரு வீடியோக்களை பார்த்துக்கொள்ளலாம். ஆனால், சத்தம் பிரதான வீடியோவில் இருந்து மட்டுமே வரும். பிப் வசதியைப் பயன்படுத்த ஸ்மார்ட்போன் மற்றும் யூடியூப் செட்டிங்கில் பிப் ஆப்சனை ஆன் செய்து கொள்ள வேண்டும். ஒருமுறை இதனை ஆன் செய்துவிட்டு ஹோம் பட்டனை அழுத்திவிட்டால் பிப் மோட் தொடங்கிவிடும்.

தற்போது அமெரிக்காவில் இந்த வசதி அனைத்து ஆண்ட்ராய்டு ஓரியோ பயனர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருவதால், விரைவில் உலகம் முழுதும் உள்ள ஆண்ட்ராய்டு ஓரியோ பயனர்களும் இலவசமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Pan Aadhaar merger time extended

'பான் - ஆதார்' இணைப்பு; 2019 மார்ச் வரை நீட்டிப்பு

மாற்றம் செய்த நாள்: ஜூலை 02,2018 00:36


புதுடில்லி : வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும், 'பான்' கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம், 2019, மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கும் பல்வேறு சேவைகளுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்காக, இந்தாண்டு மார்ச், 31 வரை அவகாசம் தரப்பட்டிருந்தது. அந்த அவகாசத்தை நீட்டிக்கும்படி, இந்தாண்டு துவக்கத்தில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இறுதி உத்தரவு :

அந்த உத்தரவில், 'ஆதார் தொடர்பான வழக்குகளில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

ஆதார் தொடர்பான வழக்கில், இறுதி தீர்ப்பு அளிக்கப்படாத நிலையில், மத்திய அரசு வரித் துறையின் கொள்கை உருவாக்கும் பிரிவான, சி.பி.டி.டி., எனப்படும், மத்திய நேரடி வரிகள் வாரியம், பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை, 2019 மார்ச், 31 வரை நீட்டித்துள்ளது.

அவகாசம் :

ஐந்தாவது முறையாக, இந்த அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், 33 கோடி பேருக்கு, பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில், 16.65 கோடி பான் கார்டுகள், மார்ச் வரை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.

உடனடி பான் எண் திட்டம்! புதிதாக பான் கார்டு பெற விரும்பும் தனி நபர்களுக்கு, ஆதார் எண் அடிப்படையில், இணையம் வாயிலாக, உடனடியாக பான் எண் ஒதுக்கீடு செய்யும் திட்டத்தை, வருமான வரித்துறை துவக்கி உள்ளது. வருமான வரித்துறை, சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு விபரம்: ஆதார் எண் வைத்துள்ள, தகுதி உள்ள தனி நபர்களுக்கு, இணையம் வாயிலாக, உடனடியாக, 'இ - பான்' எண் ஒதுக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' அடிப்படையில், குறுகிய காலத்துக்கு அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

MBBS Counseling



பொது பிரிவு மருத்துவ கவுன்சில் இன்று துவக்கம் : சிறப்பு பிரிவில், 40 பேருக்கு இடம் கிடைத்தது

பதிவு செய்த நாள்: ஜூலை 02,2018 00:42

சென்னை : எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்பில், சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில், 40 பேர் இடங்கள் பெற்றனர். பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.
தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 5,757 இடங்கள் உள்ளன. இதற்கான தரவரிசை பட்டியலில், 44 ஆயிரத்து, 332 பேர் தகுதி பெற்று உள்ளனர். மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல் நோக்கு மருத்துவமனை யில், நேற்று துவங்கியது.இதில், சிறப்பு பிரிவினர் எனப்படும், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் என, 101 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில், 63 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்.இது குறித்து, மருத்துவ தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் கூறியதாவது:சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், 38 பேர்; பி.டி.எஸ்., படிப்பில், இரண்டு பேர் என, 40 பேருக்கு, இடங்கள் ஒதுக்கப்பட்டன.மாற்றுத் திறனாளிகள் தரவரிசை பட்டியலில் இடம் பெறாதவர்களும், கவுன்சிலிங் வளாகத்திற்கு நேற்று வந்திருந்தனர். அவர்களில், ஏற்க தகுதி வாய்ந்தவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகள் பிரிவில் இடங்கள் ஒதுக்கப்பட்டன.சிறப்பு பிரிவினர் பிரிவில், எட்டு பேர் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், இன்று நடைபெறுகிறது. இதில், தரவரிசை பட்டியலில், 444வது இடம் வரை உள்ளோர் அழைக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...