சென்னை: 1,999க்கு ஒரு வருடத்திற்கு 730 ஜி.பி டேட்டாவும், அன்லிமிடெட் தொலைபேசி அழைப்பையும் வழங்கும் புதிய சலுகையை பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது. இதுகுறித்து, பிஎஸ்என்எல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வட்டத்தில் ‘எஸ்.டி.வி 1999’ என்ற ஒரு வருட புதிய சலுகையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, சென்னை தொலை தொடர்பு வட்டம் மற்றும் தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டம் ஆகிய இரண்டிற்கும் இந்த சலுகை பொருந்தும். 1,999 செலுத்தி 730 ஜி.பி டேட்டாவை ஒரு வருடத்துக்கு பெற்றுக்கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 2 ஜி.பி என கணக்கீடு செய்யப்படுகிறது. இதேபோல், அளவில்லா குரல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் இதுபோன்ற சலுகையை கொடுத்தது இல்லை. இந்த சலுகை வரும் செப்டம்பர் 22ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்த திட்டத்தின்படி தனிநபர் ஒருவருக்கு அளவில்லா அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா ஆகியவற்றை உள்ளடக்கி 5.50 பைசா மட்டுமே நாள் ஒன்றுக்கு செலவாகும். ஓராண்டுக்கு 36,500 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது அதிக நேரம் தொலைபேசியில் பேசுபவர்களுக்கும், நீண்ட நாட்கள் வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment