Sunday, July 29, 2018


பிறந்த நாள் தேதி மாற்றம்: தமிழக அரசு புதிய முடிவு


By சென்னை | Published on : 29th July 2018 02:08 AM

அரசுப் பணிகளில் சேருவோர் பிறந்த நாள் தேதியை மாற்றுவது தொடர்பான கோரிக்கையை விடுத்தால் அதற்கான நடைமுறைகள் குறித்த புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழகத்தின் அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அண்மையில் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

பிறந்த தேதியை மாற்றுவது தொடர்பாக அரசு ஊழியர் வைத்துள்ள கோரிக்கை குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்றம் சில கருத்துகளை தெரிவித்திருந்தது.
அதில், பிறந்த நாள் தேதி மாற்றம் செய்ய வேண்டும் என்று யாராவது அரசுக்குக் கோரிக்கை விடுத்தால், அவர் 10-ஆம் வகுப்பு தேர்வை எழுதும் போது 15 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்ற தகுதியை அளவு கோலாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வயதுத் தகுதியை அவர் திருப்தி செய்யவில்லை என்றால், அவருக்கு அளிக்கப்பட்ட பணி உத்தரவை ரத்து செய்துவிட்டு அனுப்பி விடலாம்.
இதனால் இதுபோன்ற கோரிக்கைகள் அரசுக்கு அடிக்கடி வருவதை தவிர்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே இதுபோன்ற கோரிக்கைகளை வைக்கும் ஊழியர்கள், 1977-ஆம் ஆண்டு வரை நடந்த பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதியபோது 15 வயதை பூர்த்தி செய்திருந்தார்களா என்பதையும், 1978-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதிய போது 14 ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறார்களா என்பதையும் சரிபார்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...