Monday, July 30, 2018

மனிதர்களை எடை போடும் மனம் தளராத மாற்றுத்திறனாளி

Added : ஜூலை 30, 2018 01:43



கை, கால் நன்றாக இருக்கும் போதே, பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துபவர்கள் பலர் உள்ள இந்த காலத்தில், இடது காலை இழந்த ஒருவர், பிச்சை எடுக்க விரும்பாமல், எடை பார்க்கும் இயந்திரம் மூலம் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர், டி.ஜி.கணேசன், 52; உப்பு மற்றும் கோலமாவு மண்டியின் உரிமையாளராக இருந்தார். விபத்தில் இடது காலை இழந்ததால், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் வாசலில், உடல் எடை பார்க்கும் கருவியை வைத்து, வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், சொந்தமாக உப்பு மற்றும் கோலமாவு விற்பனை செய்யும் மண்டி வைத்திருந்தேன். கடையில் இருப்பு வைத்திருந்த, உப்பு மூட்டைகள் சரிந்து காலில் விழுந்ததில், காலை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.ஐந்து ஆண்டுகளுக்கு முன், கண் பார்வை மங்கியதால், செயற்கை காலுடன் மாட்டு வண்டி ஓட்ட முடியவில்லை. அத்தொழிலை கைவிட்டேன். குடும்பம் நடத்துவதற்கு என்ன செய்வது என, யோசித்தேன்.

பிச்சை எடுக்கவும் மனம் வரவில்லை. இதனால், எடை பார்க்கும் கருவியை வாங்கி, கோவில்கள் அருகில் அமர்ந்தேன். கோவிலுக்கு வரும் பக்தர்கள் எடை பார்க்க, இரண்டு ரூபாய் வசூலிக்கிறேன். ஒரு நாளைக்கு, 100 ரூபாய் வருமானம் கிடைக்கும். சென்னை மெரினா பீச்சிற்கு சென்றால், 200 ரூபாய் கிடைக்கும்.இவ்வாறு, அவர், மனம் தளராமல் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...