Sunday, July 29, 2018

கார் சர்வீசில் கோளாறு: ரூ.2 லட்சம் இழப்பீடு

Added : ஜூலை 28, 2018 18:56

சென்னை, 'கார் கோளாறை முழுவதுமாக சரி செய்யாத இரண்டு நிறுவனங்கள், வாடிக்கையாளருக்கு, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில், அயனாவரத்தைச் சேர்ந்த துரைகண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:என் காரின் இன்ஜினில், ஆயில் கசிவு, 'ஏசி' கோளாறு இருந்தது. சர்வீஸ் மையத்தில், இரண்டு முறை கோளாறு சரி செய்யப்பட்டும், காரை இயக்க சிரமமாக இருந்தது.இதற்காக, 1.14 லட்சம் ரூபாய் செலவாகியும் பயனில்லை. இது குறித்து கேட்டால், சர்வீஸ் நிறுவனமும், கார் விற்பனை நிறுவனமும் சரிவர பதிலளிக்கவில்லை. 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரி இருந்தார்.வழக்கு விசாரணை சமீபத்தில் நடந்தபோது, கார் விற்பனை மற்றும் சர்வீஸ் நிறுவனங்கள் கூறியதாவது:மனுதாரர் காரை முறையாக பயன்படுத்தவில்லை. எங்கள் சேவையில் குறைபாடில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அவை கோரி இருந்தன.நீதித்துறை உறுப்பினர் பாஸ்கரன் பிறப்பித்த உத்தரவு: கார் விற்பனை மற்றும் சர்வீஸ் நிறுவனங்கள், உரிய சேவை வழங்கவில்லை. இரண்டு நிறுவனங்களும், மனுதாரருக்கு, 2 லட்சம் ரூபாய் இழப்பீடும், சேவை குறைபாட்டுக்கு, 25 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...