Sunday, July 29, 2018

கோவில் பிரசாதம் சாப்பிட்ட 200 பேருக்கு வாந்தி, மயக்கம்

Added : ஜூலை 28, 2018 23:42

திருவாரூர், திருவாரூர் அருகே, பிரசாதம் சாப்பிட்ட 200 பேர், வாந்தி, பேதி ஏற்பட்டுமயக்கம் அடைந்தனர்.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா,குவளைக்கால் மகாமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா நேற்று முன்தினம்நடந்தது.விழாவை ஒட்டி, சாமிக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து, பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளிசாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு, பிரசாதம் சாப்பிட்ட, 30 ஆண்கள் உட்பட, 200 பேர், வாந்தி, பேதி ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில், 28 பேர் மேல்சிகிச்சைக்காக, நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அங்குஅவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பிரசாதம் சாப்பிட்டதால் வாந்தி, பேதி ஏற்பட்டதா அல்லது குடி நீரால் பாதிப்பா என விசாரித்து வருகிறோம். மேலும், பிரசாதம் மற்றும் அங்கு வினியோகிக்கப்பட்ட குடிநீரை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். பரிசோதனைக்குப்பின் உண்மையான காரணம் தெரியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024