Tuesday, July 31, 2018


'நீட்' தேர்வு, 'ஆன்லைன்' கிடையாது மத்திய அரசு அறிவிப்பு

31.07.2018

புதுடில்லி : ''நீட் மற்றும் ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுகள், கணினி முறையில் நடத்தப்படுமே தவிர, 'ஆன்லைன்' முறையில் நடத்தப்படாது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர்,பிரகாஷ் ஜாவடேகர், லோக்சபாவில் நேற்று தெரிவித்தார்.




மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட், ஐ.ஐ.டி.,யில் பொறியியல்படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவுதேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.இந்த தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலைகல்வி வாரியம் நடத்தி வந்தது.
இந்நிலையில், மத்தியமனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ்செயல்படும், என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு நிறுவனம் என்ற அமைப்பு, இந்த தேர்வுகளை, 'ஆன்லைன்' முறையில், நடத்தப் போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், லோக்சபாவில்

நேற்று கூறியதாவது: நீட் மற்றும் ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளை, ஆண்டுதோறும், 24 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மாநில அரசுகள் நடத்தும் இதர தேர்வுகளை, 1.5 கோடி மாணவர்கள் எழுதுகின்றனர்.

நாடு முழுவதும்பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள்உள்ளன. அனைத்துஇடங்களிலும், இணைய வசதி, சீராக இருக்கும்என, சொல்ல முடியாது. இதை மனதில் வைத்து, நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை, ஆன்லைன் தேர்வுகளாக அல்லாமல், கணினி முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

'ஆன்லைன்' எனப்படும், இணைய வசதியில் தேர்வை எழுதும்போது, விடைகள், உடனுக்கு உடன், தேர்வை நடத்தும் அமைப்புக்கு சென்று விடும்.ஆனால், கணினி முறையில், தேர்வுக்கான கேள்வி தாள்கள் ஏற்கனவே, தரவிறக்கம்செய்யப்பட்டு, கணினியில் தயாராக இருக்கும்.

மாணவர்கள், 'மவுஸ்' உதவியுடன்,அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும். இதற்கு இணைய வசதி தேவையில்லை.அடுத்த ஆண்டு நடக்கஉள்ள, நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகள், கணினி உதவியுடன் நடக்கஉள்ள முதல் தேர்வு என்பதால், அதில் மட்டும்,

வினாத்தாள் முறையிலும் தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

'அ.தி.மு.க., வலியுறுத்தல்

அ.தி.மு.க., - எம்.பி.,யும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை நேற்று பேசியதாவது: 'நீட்' மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களால், பிளஸ் 2பாடங்களில் கவனம் செலுத்த முடியாது. இந்த தேர்வுகள், வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

இதுபோன்ற நுழைவு தேர்வுகளை, மாநிலஅரசுகள் நடத்த அனுமதிக்கப்படாததால் தான், கிராமப்புறங்களில், டாக்டர்கள் குறைவாக உள்ளனர். எனவே, இந்த நுழைவு தேர்வுகளை நடத்த, மாநில அரசுகளை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024