Sunday, July 29, 2018

தினமும் ரூ.8 கோடி நஷ்டத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள்

Added : ஜூலை 28, 2018 22:33 

ராமநாதபுரம், அரசு போக்குவரத்து கழகங்கள் தினமும் 8 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக அமைச்சர் மணிகண்டன் பேசினார்.ராமநாதபுரம் மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு ஆண்டு விழாவில் அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது:'' ஒரு மகன் தந்தையின் சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிய பின், அவரை கவனிக்காமல் விட்டுவிட்டான். வேறுவழியின்றி அவன் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மகன் எழுதி வாங்கிய சொத்துக்களை மீண்டும் முதியவர் பெயருக்கு மாற்றி உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதுபோன்ற சட்டங்கள் வரவேண்டும்.சென்னையில் மட்டும் ஜெ., உத்தரவின் பேரில் முதியவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. கட்டண உயர்வுக்கு முன் தினமும் 20 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் இயங்கின. தற்போது இது குறைந்தாலும் தினமும் 8 கோடி ரூபாய் நஷ்டத்தில் தான் இயங்குகின்றன.எனவே தான் முதியோருக்கு இலவச பஸ்பாஸ் வழங்குவதை மற்ற மாவட்டங்களுக்கும் செயல்படுத்த முடியவில்லை. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐ.என்.எஸ்., பருந்து விமானப்படை தளம் அருகே விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024