Sunday, July 29, 2018


'தமிழகத்தில் தனியார் கல்லூரிகளால் கல்வி வளர்ச்சி'


Added : ஜூலை 29, 2018 01:16 | 
கோவை, ''உயர்கல்வியில் தமிழகம் முன்னணியில் இருப்பதற்கு, தனியார் கல்லுாரிகளின் பங்களிப்பு முக்கிய காரணம்,'' என, டில்லி தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலை பேராசிரியை, மனிஷா பிரியம் பேசினார்.தமிழ்நாடு சுயநிதி, கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் சங்கம் சார்பில், 'பயன்பாடு சார்ந்த கல்விமுறை' என்ற தலைப்பில், மாநில அளவிலான பயிலரங்கு, இரண்டு நாட்களாக கோவையில் நடந்தது. விளக்கம்நிறைவு நாளான நேற்று, ஹரியானா கல்வி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை அகாடமி இயக்குனர், மர்மர் முகோபாத்யாய், டில்லி, உயர்கல்வித்துறை தலைவர், பேராசிரியர் சுதான்சு பூஷன், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி பேராசிரியர், திருவேங்கடம் ஆகியோர், பயன்பாடு கல்வி சார்ந்த விளக்கங்களை அளித்தனர்.டில்லி தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலை பேராசிரியை, மனிஷா பிரியம் பேசியதாவது:கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், பயன்பாடு சார்ந்த கல்விமுறையில், முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.தொடர் மாற்றங்கள்கல்வி நிறுவனங்கள், கற்பித்தல் மையங்களாக அல்லாமல், மாணவர்களை மையமாக கொண்ட, கற்போர் மையமாக செயல்படவேண்டும்.மாணவர்களின் திறன் ஆய்வு செய்யப்பட்டு, நம் கற்றல் முறைகளில் தொடர் மாற்றங்கள், மேம்பாடுகளை கொண்டுவரவேண்டும். உலகளாவிய அறிவை பெறவேண்டும் என்பது கல்வியின் நோக்கமல்ல; சமூக மேம்பாட்டிற்கு உதவும், பயனுள்ள நல்ல நோக்கங்களுக்கான கருவியாக, கல்வியும், பாடத்திட்டமும் அமையவேண்டும்.இதன்மூலமே, மாணவர்களின் தனித்திறன் மேம்படும். எதிர்கால பல்கலைகள், அறிவு என்பதைவிட திறன்சார்ந்த அறிவு என்பதையே ஊக்குவிக்கும். உயர்கல்வித்துறையில் தமிழகம் முன்னணியில் இருப்பதற்கான காரணம், தனியார் கல்லுாரிகளின் பங்களிப்பு என்பதை, இப்பயிலரங்கு மூலம் உணரமுடிகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழக தனியார் கல்லுாரிகளின் செயல்பாடுகள், ஆக்கப்பூர்வமாக உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...