Saturday, July 28, 2018

சூரியனுக்கு கூட தலை வணங்காத தஞ்சை பெரிய கோவில்...! எப்படி தெரியுமா..?


சூரியனுக்கு கூட தலை வணங்காத தஞ்சை பெரிய கோவில்...!
தமிழகம் மாற்றும் தமிழர்களின் பெருமை உலகம் முழுவதும் பரவி உள்ளது.
அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இன்று கண்டுப்பிடிக்கும் சாதனைகளை அன்றே நம் முன்னோர்கள் கண்டு பிடித்து விட்டனர் .
அதானால் தான் இன்று வரை நம் முன்னோர்கள் மேற்கொண்ட எந்த ஒரு செயலுக்கு பின்பும், அறிவியல் ரீதியான உண்மை இருக்கும்..இது உலகத்தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என்றே சொல்லலாம்

தமிழகத்தில் சேர சோழ பாண்டிய காலத்தில் கட்டப்பட்ட பல கோபுரங்கள் வரலாற்று சிறப்பு வாய்ந்தது மட்டுமில்லாமல், பல அதிசயங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

ஆம், தஞ்சை பெரிய கோவில், பூமியிலிருந்து செங்குத்தாக மேல் நோக்கி உள்ளது. ஒரு டிகிரி கோணம் கூட சற்று சாய்வு கூட இருக்காது. அதாவது சூரிய ஒளி பட்டு, கோபுரத்தின் உச்சி நிழல் கீழே படாதவாறு உள்ளது.
உதாரணத்திற்கு  லண்டனில் உள்ள பிக் பென்ஸ் க்ளோக் 0.26 கோண அளவில் சாய்வு இருக்கும்.இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் 3.99 டிகிரி சாய்வு இருக்கும்...ஜெர்மனியில் உள்ள சிறப்பு மிக்க டவர் 5.2 டிகிரி கோண அளவில் சாய்வு பெற்று இருக்கும்.

ஆனால் தமிழகத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவில் தான், 0.0 டிகிரி அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதான் காரணமாக தான், தஞ்சை பெரிய கோவிலை சூரியனுக்கு கூட தலை வணங்காத ராஜ கோபுரம் என அழைக்கப்படுகிறது .

Posted by SSTA

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024