Sunday, July 29, 2018

ஜாதி சான்றிதழ் தாமதம் கவுன்சிலிங்கில் அனுமதி

Added : ஜூலை 28, 2018 22:03

சென்னை, பழங்குடியின ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்த மாணவரை, மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்குக்கு அனுமதிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, வெங்கடேசன் தாக்கல் செய்த மனு:நாங்கள், பழங்குடியின சமூகமான, 'குறுமர்' இனத்தைச் சேர்ந்தவர்கள்; என் மகன் பரதன், பிளஸ் ௨ தேர்விலும், 'நீட்' தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளான்.குறுமர் ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த மனு, தர்மபுரி மாவட்ட வருவாய் கோட்ட அதிகாரியிடம் நிலுவையில் உள்ளது. சான்றிதழ் கிடைக்க, ௧௦ நாட்களாகும்.எனவே, ஜாதி சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி வற்புறுத்தாமல், பழங்குடியின பிரிவுக்கான ஒதுக்கீட்டின் கீழ், என் மகனை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை, நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.துரைசாமி ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'ஜாதி சான்றிதழை வற்புறுத்தாமல், பழங்குடியின பிரிவுக்கான ஒதுக்கீட்டின் கீழ், கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். 'சான்றிதழ் கிடைத்த உடன், அதை சமர்ப்பிக்க வேண்டும். ஜாதி சான்றிதழ் பொய்யானது என, பிற்காலத்தில் தெரிய வந்தால், மனுதாரரின் தகுதி செல்லாதது ஆகி விடும்' என, கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...