Monday, July 2, 2018

திருப்பதி செல்வோர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்!

Published on : 30th June 2018 12:00 PM  | 
திருமலை திருப்பதியில் உள்ள எழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் 16-ம் தேதி மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. 

ஏழுமலையான் கோயிலில் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அஷ்ட பந்தன மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றது. 

ஆகஸ்ட் 11-ம் தேதி அங்குரார்ப்பணம் நடைபெற உள்ளது. மகாசம்ப்ரோக்ஷணத்திற்கு கங்கண பட்டராக தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் செயல்படுவார். அவருடன் 44 வேத விற்பன்னர்கள், 100-க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள், பிரபந்த பண்டிதர்கள், வேத பாடசாலை மாணவர்கள் பங்கு கொள்ள உள்ளனர். 

இதையடுத்து, ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகள், விஐபி பிரேக் தரிசனம், பரிந்துரைக் கடிதங்களுக்கான தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

விஐபிகளுக்கு மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் தரிசனம் வழங்கப்படும். ஆகஸ்ட் 15-ம் தேதி மகாசாந்தி திருமஞ்சனம், 16-ம் தேதி காலை 10.16 மணிக்கு துலா லக்கினத்தில் மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. அதன்பின், தொடர்ந்து 48 நாட்கள் அதாவது ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.

மகாசம்ப்ரோக்ஷண நாள்களில் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஒரு நாளுக்கு 35 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனம் வழங்கப்படும் என்று தேவஸ்தான செயல் இணை அதிகாரி  சீனிவாச ராஜு தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024