Tuesday, September 29, 2020

No proof, CBI drops case on Sekar Reddy

Sureshkumar.K@timesgroup.com

Chennai:29.09.2020

A special court for CBI cases in Chennai on Monday has closed all cases registered against industrialist J Sekar Reddy and five others for allegedly causing ₹247.13 crore loss to the government by illegally converting demonetised currencies, citing lack of evidence.

Additional sessions judge S Jawahar has permitted the CBI to close the FIRs based on the final report filed by the agency. “On conclusion of investigation, CBI has filed chargesheet under section 173(2) of the CrPC recommending closure of the case for lack of sufficient evidence along with the statement of witnesses recorded during investigation,” the court said.


J Sekar Reddy and five others were booked for causing ₹247.13 crore loss to the government by illegally converting demonetised notes

Evidence, witness statements fall short in Reddy case

The court perused all the relevant records including the FIR, statement recorded under Section 161of the CrPC, and documents collected by the investigating officer, the judge said.

“Nothing incriminating surfaced to show that the accused in conspiracy with unknown bank officials and public servants cheated the government,” the court said.

The court said, “The evidence on record is not adequate to launch prosecutable case against the accused persons beyond reasonable doubt to establish that they fraudulently converted the unauthorised cash held by them in old currency notes into new high denomination notes .”

On the basis of the statement of 170 witnesses and 879 documents collected during the investigation, there is no sufficient evidence to launch prosecution against the accused for the offences of criminal conspiracy, cheating, or criminal misconduct, the court added.

“As per the oral and documentary evidence, the allegations in the FIR the accused persons have caused wrongful loss to the government to the tune of approximately ₹247 crore and obtaining corresponding wrongful gain to themselves, is not substantiated with prosecutable evidence. Hence the final report has been filed for recommending closure of the case,” the judge added, pointing to the CBI’s report. M Premkumar, K Srinivasulu, K Rethinam, S Ramachandran, and Parasmal Lodha are the other accused in the case.

Speaking to TOI, advocate S Elambharathi and Abdul Saleem, counsel for the accused, said the special court has also ordered return of all documents, material and vehicles seized during the investigation to the respective owners.

The court has also ordered return of all documents, material and vehicles seized during the investigation

Monday, September 28, 2020

மெல்போர்னில் குறையும் கொரோனா தொற்று: ஊரடங்கில் தளர்வு அளிக்க ஆஸி., முடிவு

மெல்போர்னில் குறையும் கொரோனா தொற்று: ஊரடங்கில் தளர்வு அளிக்க ஆஸி., முடிவு

கான்பெரா : ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மாகாணத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளால் தற்போது நோய் தொற்றின் பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. இதனால் ஊரடங்குகளில் தளர்வுகளை அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவில் நோய் பாதிப்புகளை குறைக்க அந்நாட்டு அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. தொற்று பாதிப்பு கண்டறியப்படும் விக்டோரியா மற்றும் மெல்போர்ன் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால், விக்டோரியா மாகாணத்தில் பாதிப்பு விகிதம் மற்றும் கொரோனா இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. ஆயினும் மெல்போர்னில் ஆக., முதல் கொரோனா ஊரடங்கு நீடித்தது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால், விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டது.தற்போது மெல்போர்ன் உள்ளிட்ட மாகாணங்களில், பாதிப்பு விகிதம் குறைய துவங்கியுள்ளது. புதிய தொற்று நோய்களின் 14 நாட்கள் சராசரி பாதிப்பு 30 முதல் 50 வரை இருந்தது. இதனால் இன்று முதல் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்க அரசு திட்டமிட்டது.

நேற்று ஒரு நாளின் பாதிப்பு 12 ஆகவும், இன்று 16 ஆகவும் இருந்தது. இதன் 14 நாட்கள் சராசரி 22.1 ஆக குறைந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மெல்போர்ன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் பணிகளுக்குத் திரும்ப உள்ளனர். அனைவரும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற சுகாதார விதிமுறையை கடைபிடிக்க வேண்டும்.ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டு வரை நாட்டின் எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது. விக்டோரியா மாகாணத்தில் 399 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஜூன் 30 க்கு பிறகு முதல் முறையாக 400 க்கு குறைவாக இருந்தது.

Dailyhunt

'மக்கள் ஒத்துழைப்பு தராவிட்டால் கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு'

Sunday, 27 Sep, 10.41 pmதினமலர்
'மக்கள் ஒத்துழைப்பு தராவிட்டால் கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு'

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தராத பட்சத்தில், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று கேரளாவில், 7 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 7,445 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அங்கு மொத்த பாதிப்பு, 1.75 லட்சமாக அதிகரித்துள்ளது.இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: மாநிலத்தில் வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மாநில அரசு சிறப்பாக செயல்பட்ட போதும், கட்டுப்பாடுகளை மீறுவதால் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மக்கள் ஒத்துழைப்பு தராத பட்சத்தில், மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழல் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Dailyhunt

எஸ்.பி.பி மரணமும் மருத்துவக் கட்டண சர்ச்சையும்!' உண்மை என்ன?

எம்.புண்ணியமூர்த்திஆ.சாந்தி கணேஷ்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்   ( Photo: Vikatan )

எஸ்.பி.பி குறித்தும், அவரது இறுதி நிமிடங்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவிவருகின்றன. அது தொடர்பான விளக்கம்...

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மரணம் இந்திய இசை ரசிகர்களைத் தீரா துயர்கொள்ளச் செய்திருக்கிறது. பலரும் கண்ணீருடன் சமூக வலைதளங்களில் எஸ்.பி.பி-யின் பாடல்களைப் பகிர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்க, ஒருசிலர் எஸ்.பி.பி-யின் மருத்துவக் கட்டணம் குறித்து சர்ச்சையான விஷயங்களைப் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி.பி. எப்படியாவது மீண்டு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் 50 நாள்களுக்கு மேலாக எல்லோரும் காத்துக்கொண்டிருந்தனர் ரசிகர்கள். இதற்கிடையில் அவருக்கு கொரோனா குணமாகிவிட்டதாகவும் மருத்துவமனை தகவல் தெரிவித்தது. மெல்ல மெல்ல நலமடைந்து வருகிறார் என்று அவரின் மகன் சரணும் நமபிக்கை தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், செப்டம்பர் 24-ம் தேதி மாலை எஸ்.பி.பி-யின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டது மருத்துவமனை நிர்வாகம். அதைத்தொடர்ந்து எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு நேரில் விரைந்த கமல்ஹாசன் திரும்பிச் செல்லும்போது, `அவர் நலமாக இருக்கிறார் எனச் சொல்ல முடியாதுஎன்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அந்தக் கணமே அனைவரின் இதயங்களும் கனத்துப் போயின. அடுத்த சில மணி நேரத்தில், எஸ்.பி.பி இறந்துவிட்டதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. அதைத் தொடர்ந்து இறந்துவிட்டார் என்பது பொய்யான தகவல் எனப் பதிவுகள் பதிவிடப்பட்டன. என்ன நடந்தது எனப் புரியாமல் ரசிகர்கள் திண்டாடினர். இந்நிலையில், அடுத்த நாள் அதாவது செப்டம்பர் 25-ம் தேதி (நேற்று) மதியம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறந்துவிட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதை மையப்படுத்தித்தான் சர்ச்சைப் பதிவுகள் முளைத்துள்ளன.

 

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

சிகிச்சைக்கான முழுக் கட்டணத்தையும் செலுத்தாததால் எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் எஸ்.பி.பி இறந்த செய்தியை வெளியிட மறுத்தது என்றும் எஸ்.பி.பி-யின் மகள் துணை ஜனாதிபதியை அணுகிய பிறகே, மருத்துவமனை நிர்வாகம் எஸ்.பி.பி-யின் உடலை விடுவித்தது என்றும் சமூகவலைதளங்களில் பதிவுகள் பரவியுள்ளன. ஒரு மகத்தான கலைஞனை, மாண்புமிகு மனிதரை இழந்து அவரின் குடும்பத்தினரும் ரசிகர்களும் துயரத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கும் சூழலில், இப்படி வெளியான செய்தி, மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இசையுலகின் ஜாம்பவானுக்கா இப்படியொரு நிலை என்றும் கேள்வியை எழுப்பியது. சமூகவலைதளங்களில் உலவும் இந்தச் செய்தி எந்தளவுக்கு உண்மையானது?

 இதுகுறித்து விசாரிக்க எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினரைத் தொடர்புகொண்டோம். எம்.ஜி.எம் மருத்துவமனையின் மீடியா இன்சார்ஜ் வசந்த் நம்மிடம், ``இது 100 சதவிகிதம் பொய்யான தகவல். எங்கள் மருத்துவமனைக்கு களங்கத்தை ஏற்படுத்த நினைக்கும் யாரோ இப்படியெல்லாம் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். அவ்வளவு பெரிய மனிதர் விஷயத்தில் நாங்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்வோமா என யோசித்துப் பாருங்கள். அப்படி ஏதேனும் நடந்திருந்தால் எஸ்.பி.பி.சரண் நேற்றே அறிக்கை விட்டிருக்க மாட்டாரா? எனவே, அந்தத் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்என்றவர், ``25-ம் தேதி மதியம் 1.04 மணிக்குத்தான் எஸ்.பி.பி சார் மரணமடைந்தார். அதற்கான எல்லா ஆவணங்களும் எங்களிடம் இருக்கின்றன. எஸ்.பி.பி.சரணுக்கு எல்லா தகவல்களும் தெரியும்என்றார்.

எஸ்.பி.பி.சரண் தரப்பில் பேச முயன்றோம்... அவரின் உதவியாளர் பிரகாஷ் நம்மிடம், ``மருத்துவக் கட்டணம் தொடர்பாக வெளிவரும் தகவல்கள் அனைத்தும் பொய்என்பதுடன் முடித்துக்கொண்டார்.

திருவடிசூலத்தில் தொடங்கியது சக்தி விகடன் நடத்தும் தன்வந்த்ரி மகாஹோமம்!

திருவடிசூலத்தில் தொடங்கியது சக்தி விகடன் நடத்தும் தன்வந்த்ரி மகாஹோமம்! 


தன்வந்த்ரி ஹோமம் 

திருவடிசூலத்தில் தேவி ஸ்ரீகுகயோகி மதுரைமுத்து ஸ்வாமிகள் முன்னிலையில் அவரின் அருளாசியோடு தன்வந்த்ரி ஹோமம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

உலகம் முழுவதும் உள்ள மனிதர்களின் இன்றைய சவாலாக இருப்பது ஆரோக்கியம். கொரோனா தொற்று அனைவரையும் மிகவும் அச்சத்துக்குள்ளாக்கியிருக்கிறது. மன அச்சம் அகலவும் நோய்கள் தீரவும் ஆரோக்கியம் மேம்படவும் தன்வந்த்ரி பகவானைப் பிராத்திப்பதும் அவரின் மூல மந்திரத்தைச் சொல்லி தன்வந்த்ரி ஹோமம் செய்வதும் நற்பலன்களைத் தரும் என்கின்றன சாஸ்திரங்கள். 

தன்வந்த்ரி ஹோமம் 

சக்தி விகடனும் - திருவடிசூலம் ஸ்ரீஆதி பரமேஸ்வரி ஸ்ரீகருமாரியம்மன் அறக்கட்டளையும் இணைந்து வாசகர்களின் ஆரோக்கியத்தை வேண்டி தன்வந்த்ரி மகாஹோமம் நடத்தத் திட்டமிட்டு தற்போது அது திருவடிசூலம் சப்த சைலஜ ஶ்ரீபாதாத்ரி நூற்றியெட்டு திவ்யதேச ஆலயத்தில் வைத்து சிறப்புற நடைபெற்றுவருகிறது. 

ஹோமம் குறித்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து நூற்றுக்கணக்கான வாசகர்கள் ஆர்வமும் தங்கள் பெயர்களை சங்கல்பத்துக்காக முன்பதிவு செய்தனர். இந்த நிலையில் திருவடிசூலத்தில் தேவி ஸ்ரீகுகயோகி மதுரைமுத்து ஸ்வாமிகள் முன்னிலையில் அவர்களின் அருளாசியோடு தன்வந்த்ரி ஹோமம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சக்திவிகடன் இணையம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் ஆர்வமுடன் தொடர்பு கொண்டு சங்கல்பத்துக்காக முன்பதிவு செய்த வாசகர்களின் பெயர்களைச் சொல்லி சிறப்பு சங்கல்பம் செய்து இந்த மகாஹோமம் தொடங்கப்பட்டது. அற்புதமான மூலிகைகள் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பான மந்திர உச்சாடனங்களோடு ஹோமம் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த யாகம் இனிதே நிறைவு பெற்றதும் வாசகர்களுக்கான ஹோம பிரசாதம் (ஹோம பஸ்பம்) விரைவில் அனுப்பிவைக்கப்படும். 

ஹலோ சீனியர்ஸ்... கொரோனா காலச் சூழலை எதிர்கொள்ள மூத்தகுடிமக்களுக்கான ஓர் இணைய வழிகாட்டல்!

 ஹலோ சீனியர்ஸ்... கொரோனா காலச் சூழலை எதிர்கொள்ள மூத்தகுடிமக்களுக்கான ஓர் இணைய வழிகாட்டல்!

சைலபதி

ஹலோ சீனியர்ஸ்

வாழ்வின் பல சவால்களையும் சமாளித்து வெற்றிபெற்ற அவர்களுக்கு இந்த கொரோனா காலச் சூழலைக் கடக்க அத்தகைய ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முதுமை என்பது வரம். இதைச் சரியாகப் புரிந்துகொண்டவர்கள் தங்களையும் பேணித் தங்களின் சுற்றங்களுக்கும் நிழல்தரும் மரமாக வாழ்கிறார்கள். ஆனால் இந்த மனநிலை அவ்வளவு எளிதில் அனைவருக்கும் வாய்த்துவிடுவதில்லை. இதுவே குடும்பச்சூழலில் பல சிக்கல்களுக்கும் காரணமாகிவிடுகிறது.

அதற்குச் சுற்றுச்சூழலும் முக்கிய காரணம். கொரோனா காலம் அனைவருக்கும் ஒரு சவால் என்றால் முதியவர்களுக்கோ அது பெரும் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது. அதிகாலை வாக்கிங் முதல் ஆலய தரிசனம்வரை அவர்களின் அனைத்தின் இயல்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

முதியவர்கள்

ஆனால், வாழ்வில் பேரனுபவம் கொண்ட சீனியர்களுக்கு மிக எளிமையாக இந்தச் சூழலை விளக்கிவிட்டால் அவர்களின் பாதுகாப்பை அவர்களே சிறப்பாகக் கையாண்டு கொள்வார்கள். குறிப்பாக அவர்களின் உடல் இயக்கம் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு அளித்து அவர்களின் ஆரோக்கியம் பற்றிய கவலைகளைப் போக்குவது மிகவும் அவசியம். வாழ்வின் பல சவால்களையும் சமாளித்து வெற்றிபெற்ற அவர்களுக்கு இந்த கொரோனா காலச் சூழலைக் கடக்க அத்தகைய ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வரும் அக்டோபர் 1 ம் தேதி உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி ஆனந்த விகடன் மூத்த குடிமக்களின் பெருமைகளைப் போற்றவும் அவர்கள் பாதுகாப்பை அவர்களே உறுதி செய்துகொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும், ‘ஹலோ சீனியர்ஸ்...என்ற ஓர் இணைய நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

இதில் பட்டிமன்றம் ராஜா, காவல்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், டாக்டர் பி. ஹரிசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். கொரோனா காலச் சூழலில் தங்களின் உடல் ஆரோக்கியம், மன வளம் மற்றும் பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்துகொள்ளும் பல்வேறு ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்கள்.

ஹலோ சீனியர்ஸ்

கட்டணமில்லா இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். வாசகர்களே, உங்கள் வீட்டில் அறுபதுவயதுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து கலந்துகொள்ள ஊக்குவியுங்கள். அவர்கள் சார்பில் நீங்களே முன்பதிவும் செய்யலாம்.

வாருங்கள் அக்டோபர் 1-ம் தேதியின் மாலையை அழகாக்குவோம்.

நாள்: அக்டோபர் - 1

நேரம்: மாலை 4 மணி முதல் 6 மணிவரை

சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக இயக்கப்படுமா?... தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு

சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக இயக்கப்படுமா?... தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு

2020-09-27@ 14:34:21

தென்காசி: தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளின் நலன் கருதி சிலம்பு எக்ஸ்பிரசை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்வையடுத்து செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் மட்டும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது. மற்ற நாட்களில் ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. தென்காசி மாவட்ட மக்களின் வரவேற்பை பெற்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவது குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை.

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் 3 நாட்களும், சென்னை செல்லும் பயணிகளுக்கு உகந்ததாக இல்லை. தென்காசி மாவட்டத்தில் இருந்து பெரும்பாலும் அலுவல் காரணங்களுக்காகவே சென்னை செல்கின்றனர். சிலம்பு எக்ஸ்பிரஸ் வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமே சென்னைக்கு செல்கிறது. வெள்ளிக்கிழமை மாலை தென்காசியில் இருந்து சென்னை செல்லும் பொழுது சனி, ஞாயிறு விடுமுறை நாளாவதால் எந்த அலுவலகத்திற்கும் செல்ல முடியாது. ஞாயிறு மாலை புறப்படும் ரயில் மட்டுமே அலுவல் காரணங்களுக்காக சென்னை செல்கின்றவர்கள் பயன்படுத்த முடியும்.

அதேபோல் சென்னையில் இருந்து திங்கட்கிழமை அலுவல் பணிகளை முடித்த ஒருவர் தென்காசி திரும்புவதற்கு ரயில் எதுவுமில்லை. இதனால் ரயில் பயணத்தை விரும்புவோர், 4 நாட்கள் சென்னையில் தங்கிவிட்டு வியாழக்கிழமை இரவுதான் சென்னையிலிருந்து தென்காசிக்கு புறப்பட முடியும். பொதிகை எக்ஸ்பிரஸ் இயக்கப்படாத நிலையில் சிலம்பு எக்ஸ்பிரஸை வாரத்தில் மூன்று நாட்கள் என்பதற்கு பதிலாக தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்பதே தென்காசி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...