Monday, September 28, 2020

மெல்போர்னில் குறையும் கொரோனா தொற்று: ஊரடங்கில் தளர்வு அளிக்க ஆஸி., முடிவு

மெல்போர்னில் குறையும் கொரோனா தொற்று: ஊரடங்கில் தளர்வு அளிக்க ஆஸி., முடிவு

கான்பெரா : ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மாகாணத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளால் தற்போது நோய் தொற்றின் பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. இதனால் ஊரடங்குகளில் தளர்வுகளை அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவில் நோய் பாதிப்புகளை குறைக்க அந்நாட்டு அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. தொற்று பாதிப்பு கண்டறியப்படும் விக்டோரியா மற்றும் மெல்போர்ன் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால், விக்டோரியா மாகாணத்தில் பாதிப்பு விகிதம் மற்றும் கொரோனா இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. ஆயினும் மெல்போர்னில் ஆக., முதல் கொரோனா ஊரடங்கு நீடித்தது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால், விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டது.தற்போது மெல்போர்ன் உள்ளிட்ட மாகாணங்களில், பாதிப்பு விகிதம் குறைய துவங்கியுள்ளது. புதிய தொற்று நோய்களின் 14 நாட்கள் சராசரி பாதிப்பு 30 முதல் 50 வரை இருந்தது. இதனால் இன்று முதல் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்க அரசு திட்டமிட்டது.

நேற்று ஒரு நாளின் பாதிப்பு 12 ஆகவும், இன்று 16 ஆகவும் இருந்தது. இதன் 14 நாட்கள் சராசரி 22.1 ஆக குறைந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மெல்போர்ன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் பணிகளுக்குத் திரும்ப உள்ளனர். அனைவரும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற சுகாதார விதிமுறையை கடைபிடிக்க வேண்டும்.ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டு வரை நாட்டின் எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது. விக்டோரியா மாகாணத்தில் 399 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஜூன் 30 க்கு பிறகு முதல் முறையாக 400 க்கு குறைவாக இருந்தது.

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024