Monday, September 28, 2020

திருவடிசூலத்தில் தொடங்கியது சக்தி விகடன் நடத்தும் தன்வந்த்ரி மகாஹோமம்!

திருவடிசூலத்தில் தொடங்கியது சக்தி விகடன் நடத்தும் தன்வந்த்ரி மகாஹோமம்! 


தன்வந்த்ரி ஹோமம் 

திருவடிசூலத்தில் தேவி ஸ்ரீகுகயோகி மதுரைமுத்து ஸ்வாமிகள் முன்னிலையில் அவரின் அருளாசியோடு தன்வந்த்ரி ஹோமம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

உலகம் முழுவதும் உள்ள மனிதர்களின் இன்றைய சவாலாக இருப்பது ஆரோக்கியம். கொரோனா தொற்று அனைவரையும் மிகவும் அச்சத்துக்குள்ளாக்கியிருக்கிறது. மன அச்சம் அகலவும் நோய்கள் தீரவும் ஆரோக்கியம் மேம்படவும் தன்வந்த்ரி பகவானைப் பிராத்திப்பதும் அவரின் மூல மந்திரத்தைச் சொல்லி தன்வந்த்ரி ஹோமம் செய்வதும் நற்பலன்களைத் தரும் என்கின்றன சாஸ்திரங்கள். 

தன்வந்த்ரி ஹோமம் 

சக்தி விகடனும் - திருவடிசூலம் ஸ்ரீஆதி பரமேஸ்வரி ஸ்ரீகருமாரியம்மன் அறக்கட்டளையும் இணைந்து வாசகர்களின் ஆரோக்கியத்தை வேண்டி தன்வந்த்ரி மகாஹோமம் நடத்தத் திட்டமிட்டு தற்போது அது திருவடிசூலம் சப்த சைலஜ ஶ்ரீபாதாத்ரி நூற்றியெட்டு திவ்யதேச ஆலயத்தில் வைத்து சிறப்புற நடைபெற்றுவருகிறது. 

ஹோமம் குறித்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து நூற்றுக்கணக்கான வாசகர்கள் ஆர்வமும் தங்கள் பெயர்களை சங்கல்பத்துக்காக முன்பதிவு செய்தனர். இந்த நிலையில் திருவடிசூலத்தில் தேவி ஸ்ரீகுகயோகி மதுரைமுத்து ஸ்வாமிகள் முன்னிலையில் அவர்களின் அருளாசியோடு தன்வந்த்ரி ஹோமம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சக்திவிகடன் இணையம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் ஆர்வமுடன் தொடர்பு கொண்டு சங்கல்பத்துக்காக முன்பதிவு செய்த வாசகர்களின் பெயர்களைச் சொல்லி சிறப்பு சங்கல்பம் செய்து இந்த மகாஹோமம் தொடங்கப்பட்டது. அற்புதமான மூலிகைகள் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பான மந்திர உச்சாடனங்களோடு ஹோமம் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த யாகம் இனிதே நிறைவு பெற்றதும் வாசகர்களுக்கான ஹோம பிரசாதம் (ஹோம பஸ்பம்) விரைவில் அனுப்பிவைக்கப்படும். 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024