Monday, September 28, 2020

எஸ்.பி.பி., சிகிச்சை கட்டணம் மகன் சரண் விளக்கம்

எஸ்.பி.பி., சிகிச்சை கட்டணம் மகன் சரண் விளக்கம்

Added : செப் 28, 2020 03:43

சென்னை : பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சைக்கான கட்டணம் குறித்து, வெளியான வதந்தி குறித்து, அவரது மகன் சரண் விளக்கம் கொடுத்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணி பாடகர், எஸ்.பி.பி., இம்மாதம், 25ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் சிகிச்சை பெற்றதற்கான கட்டணத்தை, எஸ்.பி.பி., குடும்பத்தினரால் கட்ட முடியாமல் போனதால், துணை ஜனாதிபதி உதவியுடன், எஸ்.பி.பி., உடல் பெறப்பட்டதாக தகவல் பரவியது.

இது குறித்து, வீடியோ பதிவில், எஸ்.பி.பி.,யின் மகன் சரண் கூறியுள்ளதாவது:எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட என் அப்பாவுக்கான சிகிச்சை கட்டணம் குறித்து, சில வதந்திகள் உலவுவது துரதிர்ஷ்டவசமானது. அப்பா மருத்துவமனையில், ஆக. 5ல், அனுமதிக்கப்பட்டார்; இம்மாதம், 25ம் தேதி காலமானார்.மொத்தமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்து, வதந்தி ஒன்று வந்திருக்கிறது.நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், இன்னும் பணம் பாக்கி இருந்ததாகவும், பின், தமிழக அரசிடம் கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால், துணை ஜனாதிபதியிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும், அவர்கள் உடனடியாக அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் ஒரு செய்தி உலவுகிறது.

நாங்கள் பாக்கி பணத்தை தரும் வரை அப்பாவின் உடலை, எம்.ஜி.எம்., மருத்துவமனை ஒப்படைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் சுத்த பொய்.இப்படி ஒரு வதந்தியை ஏன் பரப்புகின்றனர் என தெரியவில்லை. இதுபோன்ற வதந்திகளை பரப்பும் நபரை, எஸ்.பி.பி., மன்னிப்பார். நானும் அவரை மன்னிக்கிறேன்.எம்.ஜி.எம்., ஹெல்த்கேரின் அத்தனை சிகிச்சைக்கும், எங்கள் குடும்பத்துக்கு செய்த உதவிக்கும், எங்கள் குடும்பத்தினர் எப்போதும் நன்றியுடன் இருப்போம். மருத்துவமனை கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளியாகும். அதுவரை தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள்.இவ்வாறு, சரண் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...