Sunday, 27 Sep, 10.41 pmதினமலர்
'மக்கள் ஒத்துழைப்பு தராவிட்டால் கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு'
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தராத பட்சத்தில், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று கேரளாவில், 7 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 7,445 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அங்கு மொத்த பாதிப்பு, 1.75 லட்சமாக அதிகரித்துள்ளது.இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: மாநிலத்தில் வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மாநில அரசு சிறப்பாக செயல்பட்ட போதும், கட்டுப்பாடுகளை மீறுவதால் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மக்கள் ஒத்துழைப்பு தராத பட்சத்தில், மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழல் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Dailyhunt
No comments:
Post a Comment