ஹலோ சீனியர்ஸ்... கொரோனா காலச் சூழலை எதிர்கொள்ள மூத்தகுடிமக்களுக்கான ஓர் இணைய வழிகாட்டல்!
ஹலோ சீனியர்ஸ்
வாழ்வின் பல சவால்களையும் சமாளித்து வெற்றிபெற்ற அவர்களுக்கு இந்த
கொரோனா காலச் சூழலைக் கடக்க அத்தகைய ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முதுமை என்பது வரம். இதைச் சரியாகப் புரிந்துகொண்டவர்கள் தங்களையும்
பேணித் தங்களின் சுற்றங்களுக்கும் நிழல்தரும் மரமாக வாழ்கிறார்கள். ஆனால் இந்த
மனநிலை அவ்வளவு எளிதில் அனைவருக்கும் வாய்த்துவிடுவதில்லை. இதுவே குடும்பச்சூழலில்
பல சிக்கல்களுக்கும் காரணமாகிவிடுகிறது.
அதற்குச் சுற்றுச்சூழலும் முக்கிய காரணம். கொரோனா காலம் அனைவருக்கும்
ஒரு சவால் என்றால் முதியவர்களுக்கோ அது பெரும் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது.
அதிகாலை வாக்கிங் முதல் ஆலய தரிசனம்வரை அவர்களின் அனைத்தின் இயல்பும்
பாதிக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள்
ஆனால், வாழ்வில் பேரனுபவம் கொண்ட சீனியர்களுக்கு மிக எளிமையாக இந்தச் சூழலை
விளக்கிவிட்டால் அவர்களின் பாதுகாப்பை அவர்களே சிறப்பாகக் கையாண்டு கொள்வார்கள்.
குறிப்பாக அவர்களின் உடல் இயக்கம் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு அளித்து
அவர்களின் ஆரோக்கியம் பற்றிய கவலைகளைப் போக்குவது மிகவும் அவசியம். வாழ்வின் பல
சவால்களையும் சமாளித்து வெற்றிபெற்ற அவர்களுக்கு இந்த கொரோனா காலச் சூழலைக் கடக்க
அத்தகைய ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வரும் அக்டோபர் 1 ம் தேதி உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி ஆனந்த
விகடன் மூத்த குடிமக்களின் பெருமைகளைப் போற்றவும் அவர்கள் பாதுகாப்பை அவர்களே
உறுதி செய்துகொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும், ‘ஹலோ
சீனியர்ஸ்...’ என்ற ஓர் இணைய நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
இதில் பட்டிமன்றம் ராஜா, காவல்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன்
ஐ.பி.எஸ், டாக்டர் பி. ஹரிசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற
இருக்கிறார்கள். கொரோனா காலச் சூழலில் தங்களின் உடல் ஆரோக்கியம், மன வளம்
மற்றும் பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்துகொள்ளும் பல்வேறு ஆலோசனைகளை வழங்க
இருக்கிறார்கள்.
ஹலோ சீனியர்ஸ்
கட்டணமில்லா இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். வாசகர்களே,
உங்கள் வீட்டில் அறுபதுவயதுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு
இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து கலந்துகொள்ள ஊக்குவியுங்கள்.
அவர்கள் சார்பில் நீங்களே முன்பதிவும் செய்யலாம்.
வாருங்கள் அக்டோபர் 1-ம் தேதியின் மாலையை அழகாக்குவோம்.
நாள்: அக்டோபர் - 1
நேரம்: மாலை 4 மணி முதல் 6 மணிவரை
No comments:
Post a Comment