மாஜி துணைவேந்தர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு
Added : செப் 23, 2020 22:57
கோல்கட்டா:விஸ்வபாரதி பல்கலை., முன்னாள் துணை வேந்தர், சுஷாந்தா குப்தா மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.
சுஷாந்தா குப்தா, வேறு ஒரு பணி வாயிலாக வரும் ஓய்வூதிய விபரத்தை தெரிவிக்காமல், பல்கலை., துணை வேந்தருக்கான ஊதியத்தை பெற்று வந்துள்ளார்.இந்த முறைகேடு தொடர்பாக, 2016ல், மூன்று நபர் குழு அளித்த பரிந்துரைப்படி, அப்போதைய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, சுஷாந்தாகுப்தாவை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்தியாவில் முதன் முறையாக, ஒரு பல்கலை., துணை வேந்தர் மீது, இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.சுஷாந்தா குப்தா மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளன. அவர், தனக்கு அதிகாரம் இல்லாத போதிலும், புதிய பணியிடங்களை உருவாக்கி, ஏராளமானோரை பணியில் நியமித்துள்ளார்.இந்த குற்றங்கள் உட்பட பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பாக, சுஷாந்தா குப்தா மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment