Monday, September 28, 2020

கொரோனா பாதிப்பு 5.80 லட்சத்தை கடந்தது சென்னையில் மீண்டும் பரவல் அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு 5.80 லட்சத்தை கடந்தது சென்னையில் மீண்டும் பரவல் அதிகரிப்பு

Added : செப் 28, 2020 03:33

சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 5.80 லட்சத்தை கடந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 182 கொரோனா ஆய்வகங்களில், 96 ஆயிரத்து, 102 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டன. அதில், ௫,௭௯௧ பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில், 1,280; கோவையில், 596; சேலத்தில், 378; செங்கல்பட்டில், 296; திருப்பூரில், 282; கடலுாரில், 256; திருவள்ளூரில், 202 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில், இம்மாத துவக்கத்தில், 900 என்ற எண்ணிக்கையில் இருந்த தொற்று பாதிப்பு, சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மார்ச் முதல் நேற்று வரை, 71 லட்சம் மாதிரிகளை பரிசோதித்ததில், ஐந்து லட்சத்து, 80 ஆயிரத்து, 808 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 12 வயதுக்கு உட்பட்டவர்கள், 23 ஆயிரத்து, 399 பேர்; 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 74 ஆயிரத்து, 920 பேர். மாவட்ட வாரியாக, சென்னையில், ஒரு லட்சத்து, 63 ஆயிரத்து, 423; செங்கல்பட்டில், 34 ஆயிரத்து, 578; திருவள்ளூரில், 31 ஆயிரத்து, 652; கோவையில், 30 ஆயிரத்து, 314 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்றவர்களில், நேற்று மட்டும், 5,706 பேர் குணமடைந்தனர். இவர்களுடன் சேர்த்து, ஐந்து லட்சத்து, 25 ஆயிரத்து, 154 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தற்போது, 46 ஆயிரத்து, 341 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.நேற்று, ௮௦ பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து, இதுவரை, மாநிலம் முழுவதும், கொரோனா பாதிப்பால், 9,313 பேர் இறந்துஉள்ளனர். சென்னையில் மட்டும், 3,166 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்மாவட்டம் பாதிப்பு குணம் அடைந்தோர் இறப்பு

அரியலுார் 3,673 3,461 39செங்கல்பட்டு 34,578 31,678 542சென்னை 1,63,423 1,49,601 3,166கோவை 30,314 24,915 418கடலுார் 19,686 17,968 220தர்மபுரி 3,587 2,532 24திண்டுக்கல் 8,742 8,104 159ஈரோடு 6,388 5,230 84கள்ளக்குறிச்சி 9,034 8,428 95காஞ்சிபுரம் 21,593 20,340 309கன்னியாகுமரி 12,413 11,215 218கரூர் 2,944 2,419 39கிருஷ்ணகிரி 4,319 3,431 60மதுரை 16,359 15,235 386நாகை 5,088 4,435 80நாமக்கல் 5,027 3,940 66நீலகிரி 3,807 2,866 24பெரம்பலுார் 1,779 1,631 20புதுக்கோட்டை 8,793 7,917 135ராமநாதபுரம் 5,478 5,205 119ராணிப்பேட்டை 13,170 12,571 155சேலம் 18,685 15,568 310சிவகங்கை 5,070 4,682 120தென்காசி 7,167 6,566 134தஞ்சாவூர் 10,551 9,162 169தேனி 14,686 13,963 177திருப்பத்துார் 4,768 4,106 87திருவள்ளூர் 31,652 29,515 541திருவண்ணாமலை 15,075 13,925 223திருவாரூர் 6,950 5,812 70துாத்துக்குடி 13,256 12,530 121திருநெல்வேலி 12,463 11,361 198திருப்பூர் 7,681 5,888 126திருச்சி 10,254 9,331 145வேலுார் 14,397 13,268 226விழுப்புரம் 11,350 10,250 97விருதுநகர் 14,313 13,840 210வெளிநாட்டில் இருந்து வந்தோர் 924 921 1உள்நாட்டு விமான பயணியர் 943 918 0ரயில் பயணியர் 428 426 0மொத்தம் 5,80,808 5,25,154 9,313/***

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024