ஐஐடி, ஜிப்மர் நுழைவு தேர்வில் கலந்து கொள்வோருக்கு இ பாஸ் தனியாக தேவையில்லை: மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு
2020-06-21@ 11:17:55
சென்னை: ஐஐடி, ஜிப்மர் நுழைவு தேர்வில் கலந்து கொள்வோருக்கு இ பாஸ் தனியாக தேவையில்லை. ஹால்டிக்கெட்டை காட்டினாலே அவர்களை அனுமதிக்கலாம் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், நாடு முழுவதும் ஐஐடி ஹைதாராபாத் நுழைவுத்தேர்வு ஜூன் 24ம் தேதி நடைபெறுகிறது. இந்த நுழைவுத் தேர்வுக்கு வரும் மாணவர்களிடம் தேர்வுக்கான அனுமதி சீட்டு இருந்தால் அவர்களை அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதே போன்று சுகாதாரத்துறை செயலாளர் கலெக்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘ஜிப்மர் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இதற்கு இ-பாஸ் தேவையில்லை. ஹால்டிக்கெட் காட்டினால் போதும்’ என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment