கொரோனா பயமே இல்லை
Added : ஜூன் 02, 2020 05:47
தஞ்சாவூர் : கொரோனா பரவலை தடுக்க, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், தஞ்சையில் பலரும், முகக் கவசம் அணியாமல் சுற்றி வருகின்றனர்.
'கொரோனா பரவலை தடுக்க, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும்' என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.முதல்கட்ட ஊரடங்கில் கொரோனாவுக்கு பயந்து, அறிவுறுத்தல்களை கடைப்பிடித்த பொதுமக்கள், தற்போது அவற்றில் ஆர்வம் காட்டவில்லை. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று தஞ்சையில் பொதுமக்கள் பலரும், முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிந்தனர்.அதோடு, சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்காமல் இருந்தனர்.
தஞ்சையில் முகக்கவசம் அணியாமல் சென்றால், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அப்படி இருந்தும், பெரும்பாலான மக்கள், நேற்று முக்கவசம் அணியவில்லை. போலீசார், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என, அனைவரும் முகக்கவசம் அணியாமல் தஞ்சையில் உலா வருகின்றனர்.
No comments:
Post a Comment