Tuesday, June 2, 2020

கால் டாக்சிகள் நாளை, 'ஸ்டிரைக்?'


கால் டாக்சிகள் நாளை, 'ஸ்டிரைக்?'

Added : ஜூன் 02, 2020 00:23

சென்னை : கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கால் டாக்சி உரிமையாளர்கள், நாளை முதல் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, கால் டாக்சி சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ஜாஹிர் உசேன், நேற்று கூறியதாவது:தமிழகத்தில், ஆறு லட்சம் கால் டாக்சி ஓட்டுனர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், வங்கிக் கடன் பெற்று, வாகனங்கள் வாங்கி உள்ளனர். இரண்டரை மாதங்களாக, சவாரி இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். தற்போது, வெகு துாரம் சென்று, ஓரிரு சவாரி ஏற்றும் நிலை உருவாகி உள்ளது. ஓலா, ஊபர் நிறுவனங்கள், 30 சதவீதம் கமிஷன் பெறுகின்றன. இப்பிரச்னையில் அரசு தலையிட்டு, கால் டாக்சிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

அனைத்து ஓட்டுனர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.கால் டாக்சி நிறுவனங்கள், தற்போதுள்ள கட்டணத்தை, 50 சதவீதம் உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால், நாளை முதல், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.03.2024