Thursday, June 11, 2020

'டிமிக்கி' ஊழியர்களுக்கு பதிவுத்துறை, 'கிடுக்கி'


'டிமிக்கி' ஊழியர்களுக்கு பதிவுத்துறை, 'கிடுக்கி'

Added : ஜூன் 10, 2020 23:36

சென்னை; சுழற்சி முறையை பின்பற்றி, வேலைக்கு வராமல் விடுப்பு எடுக்கும் ஊழியர்களுக்கு, கிடுக்கிபிடி போடும் வகையில், கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், அரசு அலுவலகங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் என, அரசு அறிவித்துள்ளது.

அதற்கேற்ப, ஒவ்வொரு அலுவலகத்திலும் பணியாளர்கள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, சுழற்சி முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.இதன்படி, திங்கள், செவ்வாய் கிழமைகளில் பணிக்கு வந்தவர்கள், வெள்ளி, சனிக்கிழமைகளில் பணிக்கு வந்தால் போதும். இதனால், 14 நாட்களில், ஆறு நாட்கள் வேலைக்கு வந்திருக்க வேண்டும்.

பதிவுத்துறை, வணிக வரித்துறைகளில், இந்த சுழற்சி முறை சரியாக பின்பற்றப்படவில்லை என, புகார் எழுந்தது. இதுகுறித்து, இத்துறையின் முதன்மை செயலர் என்.முருகானந்தம் பிறப்பித்த உத்தரவு:சுழற்சி முறையில் பணிக்கு வராமல், விடுப்பு எடுக்கும் ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, திங்கள், செவ்வாய் வேலைக்கு வர வேண்டிய நபர்கள், இந்த நாட்களில் விடுப்பு எடுத்து விட்டு, வெள்ளி, சனிக்கிழமை பணிக்கு வருகின்றனர்.

இதை தடுக்க, உரிய காரணமின்றி, திங்கள், செவ்வாய் கிழமைகளில் விடுப்பு எடுத்தால், அவர்களுக்கு, புதன், வியாழக்கிழமையும் விடுப்பாக கணக்கிடப்படும். எனவே, பணியாளர்கள் சுழற்சி முறைக்கு உட்பட்டு பணிபுரிவதை, மேலதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024