கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளாடும் அரசு பஸ்கள்
Added : ஏப் 13, 2021 00:04
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பஸ்களில், இருக்கைகளில் மட்டுமே பயணியரை ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாட்டால், அரசு பஸ்கள் ஒவ்வொரு நாளும் அதிக நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
தமிழகத்தில், 22 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு, 2.25 கோடி பேர் பயணித்த நிலையில், பஸ் கட்டண உயர்வுக்குப் பின், 1.75 கோடி பேர் மட்டுமே பயணித்தனர். நஷ்டம்கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கிற்குப் பின், பயணியரின் எண்ணிக்கை மேலும் குறைந்தது. இந்நிலையில், தற்போது இருக்கைகளில் மட்டுமே பயணியரை ஏற்றிச் செல்ல வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளதால், பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பயணியரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதனால், நஷ்டம் அதிகரித்துள்ளது.இதுகுறித்து, போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்களின் வாயிலாக, ஏற்கனவே மாதம், 900 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. அதில், 330 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. 650 கோடி ரூபாய், டீசல் மற்றும் பராமரிப்புக்கு, ஒவ்வொரு மாதமும் செலவானது. அந்த வகையில், ஒவ்வொரு மாதமும், 80 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது.கொரோனா ஊரடங்குக்குப் பின், எந்த வருவாயும் இல்லாமல், செலவு மட்டும் அதிகரித்தது. இந்நிலையில், தற்போது, தினமும், 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குறைகிறது. அத்துடன், ஒவ்வொரு பஸ்சுக்கும் ஆண்டுக்கு, ௧ லட்சம் ரூபாய் வரியாக செலுத்தப்படுகிறது.
சுங்கக் கட்டணம் உள்ளிட்ட வகையில் செலவு ஏற்படுகிறது.சென்னை மாநகர போக்குவரத்து கழகங்களில், கொரோனா ஊரடங்குக்குப் பின், 2,200 பஸ்கள் இயக்கப்பட்டு, தினமும், 30 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. 'இ- - பாஸ்'தற்போது, 2,700 பஸ்கள் இயக்கப்பட்டு, 15 லட்சம் ரூபாய் மட்டுமே வருவாயாக கிடைக்கிறது. இதனால், டீசல், பராமரிப்பு, சம்பளம் உள்ளிட்ட வகையில், கூடுதல் செலவாகிறது. அதேபோல, விரைவு போக்குவரத்து கழகத்திலும், 2.15 கோடி ரூபாய் தினமும் வசூலான நிலையில், 1.60 கோடி ரூபாய் மட்டுமே, தற்போது வருவாய் கிடைக்கிறது.
தற்போது, கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வர, 'இ- - பாஸ்' நடைமுறை உள்ளதால், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து, வருவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதேபோல், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இலவச தரிசன வசதி நிறுத்தப்பட்டு உள்ளதால், ஆந்திரா செல்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. எனவே, அரசு பஸ்கள் செலவுகளை சமாளிக்க முடியாமல், தள்ளாடும் நிலைக்கு சென்றுள்ளன. எனவே, அரசு பஸ்களுக்கு, சுங்கக் கட்டணம், சாலை வரி மற்றும் டீசல் வரி உள்ளிட்டவற்றை செலுத்த வேண்டாம் என, சலுகை அளித்தால், மக்கள் சேவையை தொய்வின்றி தொடர முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment