Sunday, May 16, 2021

கொரோனா தடுப்பூசி சந்தேகங்கள் விலக

கொரோனா தடுப்பூசி சந்தேகங்கள் விலக

dinamalar

Added : மே 16, 2021 00:46

1. நான் ஏற்கனவே பை-பாஸ் ஆப்பரேஷன் செய்து கொண்டுள்ளேன். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ஏற்கனவே இருதய நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மற்றவர்களைவிட அதிக வீரியத்துடன் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

2. சர்க்கரை நோயும், ரத்த கொதிப்பும் நீண்டநாட்களாக இருக்கிறது. அதற்கான மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். நான்தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

தயக்கம் இன்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

3. எனக்கு ஏற்கனவே ஆன்ஜியோபிளாஸ்டி ஆப்பரேஷன் செய்து இருதய ரத்தகுழாயில் ஸ்டென்ட் வைத்துள்ளார்கள். அதற்காக ஆஸ்பிரின் மற்றும் குளோப்பிலட் மாத்திரைகளில் உள்ளேன். நான் தடுப்பூசிபோட்டுக் கொள்ளலாமா? தடுப்பூசி போடும் முன் ஏதாவது மாத்திரைகளை நிறுத்த வேண்டுமா?

இருதய ரத்த குழாயில் ஸ்டென்ட் வைத்திருப்பவர்கள், அத்தகைய ஸ்டென்டிற்குள் ரத்தம் உறைந்து மாரடைப்பு வராமல் இருக்கும் பொருட்டு Blood thinner எனப்படும் ஆஸ்பிரின் மற்றும் குளோப்பிலட் மாத்திரைகளில் இருப்பார்கள். இத்தகைய மாத்திரைகளுக்கும், தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தடுப்பூசி போட்ட இடத்தில் தவறுதலாக ரத்தம் வந்தால் அந்த இடத்தை 5 லிருந்து 10 நிமிடங்கள் அழுத்தி கொள்ளவேண்டும்.

4. இரண்டு தடுப்பூசி போட்ட பின்பும் கொரோனா வருமா?

தடுப்பூசி போட்டு முடித்தவர்களில் அரிதாக சிலபேருக்கு கொரோனா மீண்டும் பாதிக்கிறது. ஆனால் அதனுடைய வீரியத் தன்மை மிகவும் குறைந்ததாக இருக்கிறது. விரைவில் அவர்கள் குணமடைந்து வெளியில் வருவது எளிதாகிறது. மரணம் ஏற்படுவது மிகமிக அரிது.

5. எனக்கு சில உணவு பொருட்களுக்கும் மாத்திரைகளுக்கும் ஒவ்வாமை உள்ளது. நான் தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானதா? அதனால் பக்க விளைவுகள் வருமா?

ஓவ்வாமை தன்மைஉள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானதே. அவர்கள் தடுப்பூசி போட்ட உடன் 30 நிமிடங்கள் மருத்துவமனையிலேயே மருத்துவரின் கண்காணிப்பில் இருத்தல் வேண்டும்.-

டாக்டர் கருப்பையா

இருதய நோய் சிகிச்சை நிபுணர்

மதுரை

No comments:

Post a Comment

NEWS TODAY 19.04.2024 & 20.04.2024