Saturday, May 22, 2021

சென்னை:முதல் மனைவி இறந்ததால், இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணின் பெயரை, ஓய்வு பெற்ற தொழிலாளியின் பணி ஆவணங்களில் சேர்க்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை:முதல் மனைவி இறந்ததால், இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணின் பெயரை, ஓய்வு பெற்ற தொழிலாளியின் பணி ஆவணங்களில் சேர்க்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில், கலியமூர்த்தி என்பவர் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது மனைவி ராஜலட்சுமி, 1999ம் ஆண்டில் இறந்தார்.

பெயர் நீக்கம்

அடுத்த ஆண்டில், உஷாராணி என்பவரை, இரண்டாவதாக திருமணம் செய்தார். பணி பதிவேட்டில் உஷாராணியின் பெயரை சேர்க்கும்படி கோரினார்; எந்த நடவடிக்கையும் இல்லை.இதையடுத்து, பணி பதிவேட்டில் இடம் பெற்றுள்ள முதல் மனைவியின் பெயரை நீக்கி விட்டு, இரண்டாவது மனைவி உஷாராணியின் பெயரை சேர்க்கவும், தன் இறப்புக்கு பின், அவருக்கு ஓய்வூதியம் வழங்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் கலியமூர்த்தி வழக்கு தொடர்ந்தார்.

மனு, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் அஜய் கோஷ் ஆஜரானார்.உத்தரவுநீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: முதல் மனைவி இறப்புக்கு பின், இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.சட்டப்பூர்வமான மனைவிக்கு, கணவனின் பணி ஆவணங்களில் இடம் பெற உரிமை உள்ளது.அதனால், உஷாராணியை சேர்த்து,அலுவலக ஆவணங்களில் மாற்றம் செய்ய, எந்த தடங்கலும் இல்லை.

எனவே, மனுதாரரின் இறப்புக்கு பின், ஓய்வூதியம் மற்றும் இதர பலன்களை பெற ஏதுவாக, பணி ஆவணங்களில் உரிய மாற்றம் செய்யும்படி, நிர்வாகத்துக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024