Friday, April 21, 2017


‘‘ஏன் டாஸ்மாக்குக்கு எதிராக போராடுகிறோம் தெரியுமா’’ - தமிழக பெண்கள் சார்பில் ஒரு மடல்!

ஶ்ரீதேவி.கே




டாஸ்மாக்... இந்த வார்த்தையக் கேக்கும்போதே எங்க மனசுல வெஷம் பாய்ச்சின மாதிரி இருக்கு. இது எத்தனை பொண்ணுகள விதவையா, வாழாவெட்டியா ஆக்கி வீதியில வீசியிருக்கு தெரியுமா? புருஷன் குடிச்சிட்டு வர்ற வீட்டுல அவனுக்கு வாக்கப்பட்ட பெண்டாட்டியும், அவனை நம்பிப் பொறந்த புள்ளையும் படற வேதனை எவ்வளவு கொடூரமானது தெரியுமா?இப்போ இத்தனை பொம்பளைங்க தமிழ்நாட்டுல வீதியில இறங்கி போராடுறோமே ஏன் தெரியுமா..?

புருஷன் ஒவ்வொரு நாளும் வேலை முடிஞ்சி வீட்டுக்கு வரும்போதே குடிச்சிட்டுத்தான் வருவான்னு தெரிஞ்ச பொம்பள மனசு படுற பாடு, சென்மச் சாபம். அவன் வீதியில ஆடை வெலகிக் கெடக்குற கோலத்த, பார்த்தவங்க வீட்டுல வந்து பகடியா சொல்லிட்டுப் போக, ஓடிப்போயி அவனத் தோள் சொமையாத் தூக்கியாந்து வீட்டுக்குள்ள போட்டு, சாப்பிட்டானோ இல்லையோனு வயித்துக்கு ஆகாரம் வெச்சு, அவன் போதையில ஒறங்கிப்போக, பாவி மகளுக்கு தூக்கம் ஒரு கேடா? பாவம் கொட்டக் கொட்டக் முழிச்சிருப்பா. சில பேருக்கு போதையில இருக்கும்போது பொண்டாட்டிய அடிக்கிறது வழக்கமாகிச்போச்சு. அவன் கண்ணுல பட்டா அடிப்பான், உதைப்பான், 'இன்னும் குடிக்கக் காசு கொடுடீ'ன்னு தலைமுடியப் புடிப்பான். அதவிட, கண்ணுமண்னு தெரியாம அவன் ஏசுற வார்த்தைங்க பெருசா வலிக்கும் அவளுக்கு. அதனாலயே புருஷனுக்கு போதை குறையுற வரைக்கும் அவன் கண்ணுல பட்டுடக் கூடாதுன்னு தன் குழந்தைய முந்தானையில ஒளிச்சிக்கிட்டு ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில கெடக்குற அவளோட அவஸ்தைய என்னன்னு சொல்ல?

பாவி மக அவன கட்டினத தவிர வேறு எந்தப் பாவத்தையும் பண்ணலையே? சோம்பேறியா, ஒதவாக்கரையா அவனுக்குக் கட்டுனவன் வாய்ச்சிருந்தா, விதிச்சது அதுதான்னு விடலாம். ஆனா, ஓடா ஒழைக்குற மனுசன், அப்படி ஒழச்ச காசையெல்லாம் நேரா சாராயக் கடையில கொண்டு கொடுத்து கரியாக்குற கொடுமைய, அவ மனசு எப்படித்தான் ஏத்துக்கும்? அஞ்சையும் பத்தையும் அவ யோசிச்சு யோசிச்சு செலவளிச்சு அஞ்சறப் பெட்டியில சேர்த்துவெக்க, அவனோ கொல்லுற குடிக்க நோகாம காச நீட்டிட்டு வர்ற பாதகத்தை பார்த்துப் பார்த்துப் பழகித்தான் போயிட்டா போக்கத்தவ. ஆனாலும், புள்ளைங்க பசியாத்த முடியாத வறுமையிலயும் புருஷன் குடியை விடாமக் கெடக்குறதைக் காணச் சகிக்காம, அந்த கொடூரத்தை வாழச் சகிக்காம ஊருக்கெணரு, ஒரு மொழம் கயிறுனு உசுரை மாய்ச்சுக்கிட்ட பொம்பளைக கதையையெல்லாம் கேட்டிருக்கோம்தானே? குடி, குடிக்கிறவன் ஒடம்ப மட்டுமா கெடுக்குது? அவன் வீட்டுப் பொம்பளைக மானம், நிம்மதி, சந்தோஷம், உயிருனு அம்புட்டையும் பறிச்சுப் போடுது. அவங்க செத்துச் செத்துப் பொழைக்கிறாங்க, இல்ல செத்தே போறாங்க.

கட்டிக்க நல்ல துணி இல்ல. நல்ல நாளு கிழமையில மத்த பொம்பளைங்களப் போல வீதியிட நடமாட முடியல. நல்லது கெட்டதுக்கு பக்கத்துல வாங்கின கடன அடைக்க முடியல. இப்படி திரும்பின பக்கம் எல்லாம் ஏச்சும், பேச்சும் அவள குனிக் குறுக வெச்சு, குமுறி அழகுறோமே?. இந்தப் பொழப்புக்கு தான் பொம்பளையா பொறந்தமான்னு ஒவ்வொரு நிமிஷமும் உசுற உலுக்குதே. எங்க வலி யாருக்கும் புரியலையா?

ஈரக்கொல செத்து, வயிறெல்லாம் புண்ணாகி, வாழ நாதியத்து அவன் படுக்கையில கெடக்குறப்போ தாலிய காப்பாத்த நாங்க படுற பாடு சொல்லிமாளுமா? பொம்பள உடம்பையும், மனசையும் கல்லா இறுக வெச்ச அவன காப்பாத்த எத்தனையோ இடத்துல கையேந்துறோம். ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலைஞ்சு தாலிய அடகு வச்சி வீட்டுக்கு கொண்டாறோம். எந்திரிச்சி நடக்க உடம்புல தெம்பு வந்ததும் நேரா ‘டாஸ்மாக்’ கடைக்குத் தானே போயித் தொலைக்கிறான். நாங்க பட்ட பாடெல்லாம் வீணாப் போகுதே! எம் புள்ளையும் குட்டியும் நடுத்தெருவுல நிக்குதே. எங்க கண்ணீர தொடக்கணும்னு யாருக்கும் தோணலையா?

பொம்பளையா பொறந்துட்ட பச்ச மண்ணு கூட இங்க வாழ முடியலையே. குடிச்சி தொலைக்கிறவன் தன்னோட வெறிய தீத்துக்க வீட்ட உடைச்சு சின்னப் புள்ளைங்கள சிதைச்சு சாவடிச்சி வேலியில எறியுரானே, சொல்லாத உறுப்புல தீ வைச்சுக் கொல்லுறானே. அந்த புள்ளைங்க என்ன பாவம் செஞ்சிச்சு. அந்த நேரத்தில எப்படித் துடிச்சிருக்கும், என்ன நெனச்சி கதறியிருக்கும். பொம்பளையா பொறந்தது அது செஞ்ச குத்தமா? இப்படி எத்தனை குழந்தைங்க, பொண்ணுங்க இந்த மண்ண விட்டுப்போச்சோ...அந்த கதறல் எதுவும் உங்க காதில் விழலையா?

எல்லாரும் ஓட்டுப் போட்டு உக்கார வெச்ச அரசாங்கம் தானே டாஸ்மாக் கடைய நடத்துது. படிப்படியா கடைகள மூடுறேன்னு கண்ணாமூச்சி காட்டுது. குடியிருக்குற வீட்டுக்குப் பக்கத்தில கடைய தெறந்தா பொம்பளைங்களும் குழந்தைங்களும் தெருவுல நடக்க முடியுமா? குடிக்கிறவன் வீட்டுல உலை கொதிக்குமா. குடிச்சிக் குடிச்சே எத்தனை குடும்பம் நாதியத்துப் போகுமோ? எத்தன குழந்தைங்க நடுத்தெருவுக்கு வருமோ?

எங்க குழந்தைங்க படிக்க வழியில்லாம வேலைக்கு போகுது. சின்ன வயசுலயே அப்பனப் பார்த்து அதுவும் குடியில அழியுது. போதையில சிக்கி அடுத்த தலைமுறையும் அழிஞ்சி போறது அரசாங்கத்துக்கு தெரியாதா? இந்தப் பணத்துலதான் எங்கள வாழ வைக்கிறதா அரசாங்கம் சொல்லுது. இப்படியொரு வாழ்க்க எங்களுக்கு எதுக்கு? பொறந்த பொறப்புக்கும், பெத்துப் போட்ட பிள்ளைக்குன்னும் அல்லாடுற பொழப்புன்னு கெடந்து சாவுறோம்.

தீபாவளி, பொங்கல், தேர்தலுன்னா கொட்டுற டாஸ்மாக்கு வருமானத்தை செய்தியாப் போடுறாங்க. டிவி பொட்டியில இருந்து ஆடு, மாடு வரை அரசாங்கம் கொடுக்குற இலவசமெல்லாம் இந்த வருமானத்துலதான்னு சொல்லிக்குறாங்க. இந்தக் குடிக்கு புருஷனை சாகக் கொடுத்த பொம்பளைங்க, தகப்பனைத் தூக்கிக்கொடுத்த புள்ளைங்க, புள்ளையை தூக்கிப்போட்ட பெத்தவங்கனு... இவங்களுக்கு எல்லாம் என்ன நியாயம் சொல்லும் இந்த அரசாங்கம்? அப்ப நீங்க போடுற திட்டங்க, அள்ளிக் கொடுக்குற இலவசங்க எல்லாத்துக்கும் மூலதனம் பொம்பளைங்க கண்ணீருதானா?

எல்லாத்தையும் சகிச்சிக்க நாங்க என்ன ஏமாளிப் பொம்பளைங்களா? அரசாங்கம் எங்களுக்கு வாழ்க்க தர வேணாம். எங்கள வாழ விட்டாப் போதும். இலவசமா எதுவும் தர வேணாம். அரைவயித்துக் கஞ்சியாவது நிம்மதியா குடிக்கனும். கசிங்கின சேலையக்கூட கவுரவமாக கட்டிக்கிட்டு நடக்கணும். இவன் பொண்டாட்டின்னு பெருமையா சொல்லிக்கனும். எம் புருஷன் குடியில செத்து அழியாமா என் குடும்பம் ஒவ்வொரு கவள சோத்தையும் சந்தோஷமா விழுங்கணும்.

எங்க வாழ்க்கைய அரசாங்கம் காப்பாத்தும்னு நம்பி இத்தன நாளா ஏமாந்தது போதும். இனியும் பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியாது. திருப்பூருல ஈஸ்வரி கன்னத்துல அடிவாங்கினப்போ அத்தனை பொம்பளைக்கும் அடி வயிறு எறிஞ்சது. இப்போ சாமளாபுரம் டாஸ்மாக் கடைய மூடிட்டதா கேள்விப்பட்டதும் அடி மனசு குளிறுது. குடிச்சிட்டு வர்ற கணவன் கிட்ட அடி வாங்கி தினம் தினம் சாவறத விட ரோட்டுல இறங்கி போராடி டாஸ்மாக்க மூடுறதுனு முடிவெடுத்துட்டோம். வறுமையிலும் கொடுமையிலும் இறுகின மனசுக்கு போராட்ட வலி ஒண்ணும் புதுசில்ல. பொம்பள வீதியில இறங்கின அப்புறம் வெற்றிய பாக்காம வீடு திரும்பினதில்லை. புலிய முறத்தால அடிச்ச தமிழச்சிங்க இப்போ டாஸ்மாக்க இழுத்து மூடுறதுக்காகவும் ஓங்கி அடிப்போங்க... உயிரையும் கொடுப்போங்க. எங்க பிள்ளைங்களாவது குடியில அழியாம கவுரவமா வாழட்டும்.

"பொண்ணு ஆபரேஷனுக்கு சம்பாதிக்க சவூதி போனேன். ஆனா, அங்க....!" - ஒரு தந்தையின் கண்ணீர் கதை #MustRead..VIKATAN

ஜெ.அன்பரசன்

தே.அசோக்குமார்




'அவனுகென்னப்பா சவூதில வேலை பாக்குறான்' - இப்போதும் நமது ஊர்ப்புறங்களில் வளைகுடா நாடுகளில் வேலைசெய்பவரைப் பற்றி இப்படிக் கூறக் கேள்விபட்டிருப்போம். வளைகுடா நாடுகளில் வேலை செய்வது என்ன அவ்வளவு பெரிய கௌரவமா? ஒருவேளை, நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர்ந்து லட்சம்லட்சமாச் சம்பளம் வாங்குபவருக்கு வேண்டுமானால் அது கௌரமாக இருக்கலாம். ஆனால், ஏழ்மையில் வாடும் குடும்பத்தைக் காப்பாற்ற, வேலை வேண்டி வளைகுடா நாடுகளுக்குப் பயணப்படும் கூலித் தொழிலாளிகளுக்கு என்றுமே அது ஒரு சாபம்தான்.

மற்ற நாடுகளுக்குச் செல்வதைக் காட்டிலும் வளைகுடா நாடுகளுக்குச் செல்வது செலவுக் குறைவு என்பதால், பெரும்பாலானோர் சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன் ஆகிய நாடுகளுக்குப் பிழைப்புத் தேடிச் செல்கின்றனர். வளைகுடா நாடுகள் அனைத்தும் கூலித் தொழிலுக்காக இந்தியர்களையே அதிலும் குறிப்பாகத் தமிழர்களையே குறிவைக்கின்றன. குறைவான சம்பளத்தில் அதிக வேலை வாங்கிக்கொள்வதற்கும், அவர்கள் சொல்லும் வேலையை அடிமை முறையில் செய்யவும் தொழிலாளி தேவைப்படுகிறான். அதற்காக ஏழ்மையில் வேலை தேடிச் செல்லும் நம் ஊர் நபர்களை அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர். வளைகுடா நாடுகளுக்கு, வேலைக்கு ஆள்பிடித்து அனுப்பும் ஏஜென்டுகளின் பித்தலாட்டம் பலரின் வாழ்க்கையையே தொலைத்துப்போகச் செய்கிறது. இவர்கள் நமது ஊர் ஆட்களிடம் நல்ல சம்பளம், எட்டுமணி நேரம் பணி என்று சொல்லி... எங்கோ ஒரு மூலையில் உயிரைக் கரைந்துபோகச் செய்யும் பாலைவனத்தின் நடுவில் ஒட்டகம் மேய்ப்பதற்கும், பணக்காரர்களின் வீடுகளில் அடிமையாக வேலை செய்வதற்குமான வேலையை ஏற்பாடு செய்துகொடுக்கின்றனர். அவர்களும் நம் ஊர் ஏஜென்ட்களின் சதி புரியாமல் வளைகுடா நாடுகளில் சென்று மாட்டிக்கொள்கிறார்கள்.



நினைத்துச் சென்ற வேலையில்லாமல் கஷ்டப்படுவது ஒருபுறம் என்றால்... மறுபுறம், உடல்ரீதியான பல கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். அப்படிக் கொடுக்கப்படும் வேலையை பல மணிநேரங்கள் செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு நம்மூர் ஆட்கள் தள்ளப்படுகிறார்கள். தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என அந்த நாட்டு உரிமையாளர்களிடம் கேட்கும்போது அவர்களின் மிரட்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். மேலும், சிலரோ நம் விதி இதுதான் என தம் வீட்டுக் கஷ்டங்களை நினைத்து அங்கேயே கிடந்து வாழ்வைத் தொலைக்கின்றனர். அப்படியான நிலைமைக்குத் தள்ளப்பட்டவர்தான் ராமநாதபுரம் களத்தாவூரைச் சேர்ந்த பழனிக்குமார் கருப்பையா. இவர், கடந்த 2014-ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு கொத்தனார் வேலைக்குச் சென்று... அங்கு நிறுவன உரிமையாளரால் கொடுமைப்படுத்தப்பட்டு 10 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றிருக்கிறார். பலதடவை இந்தியத் தூதரகத்துக்குத் தன்னை மீட்கும்படி மனு அனுப்பியிருக்கிறார். ஆனால், இந்தியத் தூதரகம் அந்த மனுவைக்கூட வாங்கிக்கொள்ளவில்லை. கடைசியில், 'மக்கள் பாதை' இளைஞர்களுக்குத் தகவல் தெரிய, பல போராட்டங்களுக்குப் பிறகு... ஒருவழியாக அவர்கள் பழனிக்குமார் கருப்பையாவை சிறையில் இருந்து மீட்டு தமிழ்நாடு கொண்டுவந்து சேர்த்துள்ளனர். இன்று (20-04-2017) அதிகாலை சென்னை விமான நிலையத்துக்கு வந்த பழனிகுமார் கருப்பையா நம்மிடம் பேசியபோது...



"எனக்குச் சொந்த ஊரு ராமநாதபுரம் களத்தாவூர். கல்யாணமாகி மூணு பொம்பளை புள்ளைங்க இருக்குது. முதல் பிரசவத்துல ரெட்டை குழந்தைங்க பொறந்தாங்க. அதுல ஒரு புள்ளை மாற்றுத்திறனாளியா பொறந்திடுச்சி. 'ஆபரேஷன் பண்ணினா சரியாயிடும்; ஆனா, அதுக்குக் கொஞ்சம் பணம் அதிகமா செலாவாகும்'னு டாக்டர்ங்க சொன்னாங்க. அதனால வெளிநாட்டுக்குப் போயி ரெண்டு வருஷம் சம்பாதிச்சா, அதில் கிடைக்கும் பணத்துல பாப்பாவைக் குணப்படுத்தலாம்னு நினைச்சி சவூதிக்கு போகலாம்னு முடிவெடுத்தேன். 'எட்டு மணி நேரம் வேலை, நல்ல சம்பளம், நல்ல முதலாளி, ஒரு பிரச்னையும் இருக்காது'னு ஏஜென்ட் சொல்ல... நானும் 2014-ம் வருஷம் சவூதிக்குப் போனேன். ஆனா, அங்கே எனக்கு இங்கே சொன்ன மாதிரி வேலை தரல. 12 - 14 மணி நேரம் வேலை செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தினாங்க. களைப்புக்குக் கொஞ்சம் ஓய்வெடுத்தாலும் கேவலமாக திட்டுவாங்க. சொன்ன சம்பளமும் தரலை. எதிர்த்து கேள்வி கேட்டா அடிப்பாங்க. எம்பொண்ணுக்கு ஆபரேஷன் பண்ண வேணும். அதனால, எல்லாத்தையும் தாங்கிக்கிட்டேன். அதற்காக இன்னும் அதிகமா வேலை கொடுக்க ஆரம்பிச்சாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கும். நேரத்துக்குச் சாப்பிட முடியாது. பல்லைக் கடிச்சிக்கிட்டு 15 மாசம் ஓட்டினேன். இதுக்கு மேல இங்க இருந்தா செத்துருவோம்னு நெனச்சி ஊருக்குப் போலாம்னு முடிவு பண்ணேன். ஆனா, விடமாட்டேன்னு சொல்லிட்டாங்க. எனக்கு வொர்க் பர்மிட் முடியலை. ஆனாலும், எப்படியோ கஷ்டப்பட்டு பாஸ்போர்ட் வாங்கிட்டு ஊருக்குக் கெளம்பலாம்னு முடிவு செஞ்சப்போ போலீஸ்காரங்க, 'உனக்கு வொர்க் பர்மிட் எப்பவோ முடிஞ்சிருச்சி. ஆனா, நீ இன்னும் இங்கேயே சுத்திக்கிட்டு இருக்கியா'னு சொல்லி கைதுபண்ணிட்டாங்க. 'எனக்கு இன்னும் வொர்க் பர்மிட் முடியல; என்ன விட்ருங்க; என் ஊருக்கு போகணும்'னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஆனா, அவங்க யாருமே காதுல வாங்கலை.



ஊர்ல என் தம்பிக்கு போன் பண்ணிச் சொன்னேன். அவனும் யார்யாரையோ பார்த்துப் பேசினான். எவ்வளவோ முயற்சி செஞ்சான். ஆனா, ஒண்ணும் பண்ண முடியலை. சவூதில இருக்குற இந்தியத் தூதரகத்துக்கு, 'என்மேல எந்தத் தப்பும் இல்லை; என்னைக் காப்பாத்துங்க'னு பலமுறை மனுக் கொடுத்தேன். அவங்க அந்த மனுவைப் படிச்சாங்களா, இல்லையானுகூட எனக்குத் தெரியாது. இப்படியே சவூதி ஜெயில்ல பத்து மாசம் ஓடிருச்சி. நான் ஜெயில்ல இருந்தபோது என்னோட கவலை ஒண்ணேஒண்ணுதான். எம்பொண்ணுக்கு நான் எப்படி ஆபரேஷன் செய்யப்போறேன்? என்னை நம்புன குடும்பத்துக்குக் கொஞ்சமாவது சந்தோஷம் கொடுக்கத்தான் சவூதி வந்தேன். ஆனா, என் நிலைமையால என் குடும்பமே இப்ப நிலைகுலைஞ்சி போச்சுனு நினைக்கும்போதுதான்..." என்று அவர் கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரைத் துடைத்தபடி மீண்டும் பேச ஆரம்பித்தார். ''அப்புறம் ஜெயிலுக்கு வந்த ஒருத்தர்கிட்ட இருந்து போனை வாங்கி, 'என்னைக் காப்பாத்துங்க'னு பேசி வாட்ஸ்அப்ல போட்டேன். அதை, 'மக்கள் பாதை' இளைஞர்கள் கேட்டுட்டு என்னை வெளியில் கொண்டுவர சவூதில இருந்த யார்யாரையோ பிடிச்சி முயற்சி பண்ணாங்க. அவங்கமூலமா சமூக நல ஆர்வலரான வாசு சிதம்பரம் சார் என்னைவந்து பார்த்தாங்க. 'எப்படியாவது உன்னை வெளியில கொண்டு வர்றேன்'னு சொல்லி எனக்காக அந்த நாட்டு போலீஸ்கிட்ட பேசினார். 35,000 ரியால் பணம் ஃபைன் கட்டணும்னு போலீஸ்காரங்க சொல்லியிருக்காங்க. அப்புறம் போலீஸ், கோர்ட்டுன்னு அலைஞ்சி வாசு சிதம்பரம் சார் என்ன ஃபைன் கட்டாம வெளியில கொண்டுவந்துட்டாங்க. கையில சுத்தமா பணம் இல்லை. எப்படி ஊருக்குப் போறதுனு வழிதெரியாம தவிச்சப்பதான் மக்கள் பாதை இளைஞர்கள் எனக்கான எல்லாச் செலவையும் ஏத்துக்கிட்டு என்னை ஊருக்குக் கொண்டு வந்தாங்க. என்னை மீட்டு ஊருக்குக் கொண்டுவந்த அனைவரையும் நான் எப்பவும் மறக்கமாட்டேன்.



என்னை மாதிரி பலபேர் வெளியில தெரியாம அங்கே பல கொடுமைகளைச் சந்திச்சிக்கிட்டு எப்படா நம்ம ஊருக்குப் போவோம்னு தவம் கெடக்குறாங்க. இந்திய அரசாங்கம் அவங்களுக்கு நல்ல வேலை எல்லாம் வாங்கித் தர வேணாம். அங்கே சிக்கித் தவிக்கிற நம்ம ஆளுங்கள பத்திரமா மீட்டுக்கொண்டு வந்தாலே புண்ணியமா போகும்'' என்றவர், ''ஆசை ஆசையா சவூதி போனேன். இரண்டரை வருஷம் வீணா போச்சி; பணமும் சம்பாதிக்கலை மனசும் தளர்ந்துடுச்சி. எம்பொண்ணு ஆபரேஷன் எப்படிப் பண்றதுன்னு தெரியலை. ஒரு மாதிரி வலிக்குது" என்று சொல்லிமுடிக்கும் முன்பே கண்ணீர் மீண்டும் பெருக்கெடுத்தது.

பெற்ற மகளை குணமாக்க சவூதி அரேபியா சென்றவர், 10 மாதம் சிறையையும் சித்ரவதையையும் மட்டுமே அனுபவித்துவிட்டு திரும்பி உள்ளார். வெறும் கையோடு திரும்பியவரின் வேதனைக்கு தீர்வு, அவர் மகள் குணமடைவதில்தான் இருக்கிறது. அவர் மகள் குணமாவதற்கு பணம் மட்டுமே தடையாக இருக்கிறது... தடை தகருமா? தந்தையின் வேதனை தீருமா?
சவூதி அரேபியாவில் புதிய சட்டம் - வெளிநாட்டவர்களுக்கு சிக்கல்
கார்த்திக்.சி

சவூதி அரேபியாவில் உள்ள ஷாப்பிங் மால்களில் அந்நாட்டவர்களை மட்டும் வேலைக்கு நியமிக்க வேண்டும் என்று சவூதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை சவூதி அரேபிய தொழிலாளர் அமைச்சகம் பிறப்பித்துள்ளது.




சவூதி அரேபியாவில் 2030-ம் ஆண்டுக்கான பொருளாதார சீர்திருத்த திட்டம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, சவூதி அரேபியாவில் சிறு, குறு தொழில் நடைபெறும் இடங்களில் 15 லட்சம் பேர் வரை வேலை பார்த்து வருகின்றனர். அதில் 3 லட்சம் பேர் மட்டுமே சவூதி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சவூதி நாட்டில் சிறு தொழில்கள் நடைபெறும் துறைகளில் 5-ல் ஒருவர் மட்டுமே சவூதி நாட்டைச் சேர்ந்தவர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதில் 2020-ம் ஆண்டுக்குள் இந்தத் துறைகளில் சவூதி நாட்டைச் சேர்ந்த 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் அந்நாட்டு அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சவூதி அரசின் இந்த நடவடிக்கையால் ஏராளமான இந்தியர்கள் வேலை வாய்ப்புகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?
SAKTHIVEL MURUGAN G

பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான அனைத்துப் பணிகளையும் அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பம் மே 1 தேதி முதல் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. மே 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.



மே-12ம் தேதி பன்னிரண்டாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்து இருக்கிறார். பொதுத்தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறீர்கள் என்ற விவரத்தை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். அதன்பின்பு இணையத்தில் விண்ணப்பித்த விவரங்களை நகலோடு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தை ஜூன் மாதம் 3-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஜூன் மாதம் 20-ம் தேதி ரேண்டாம் எண்ணும், 22-ம் தேதி ரேங்க் பட்டியலையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும். அதன் பின்பு, ஜூன் மாதம் 27-ம் தேதி கவுன்சிலிங் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறுகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதன் பின்பு மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் நடைபெற வேண்டும். அதன் பின்பு பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் நடத்தத் திட்டமிட்டு இருப்பதால் கவுன்சிலிங் நடைபெறுவதற்கான தேதி மாற வாய்ப்பு உள்ளது.

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் வழியாக விண்ணப்பித்தால் மட்டும் போதுமானது. இணையத்தில் விண்ணப்பிக்கும் போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். விண்ணப்பக்கட்டணம் குறித்த விவரங்கள் ஏப்ரல் 30 தேதி வெளியிடப்படும். கடந்த ஆண்டு பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ. 500 ரூபாயும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி பிரிவைச் சார்ந்தவர்களுக்கு ரூ. 250 கட்டணமாகப் பெற்றிருக்கிறது.

விண்ணப்பத்துடன் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் நகல், பன்னிரண்டாம் வகுப்பின் மதிப்பெண் நகல் - பொதுத்தேர்வு முடிவு வெளியானவுடன் இணையத்தில் மதிப்பெண் வெளியிடப்படும். அதனை பிரிண்ட் எடுத்து இணைக்கப்பட வேண்டும். இதனுடன் சாதி சான்றிதழ் நகல், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வின் ஹால் டிக்கெட், முதல் பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்றிதழையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர்களுக்கான பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் அதற்கான சான்றிதழை இணைக்க வேண்டும். கவுன்சிலிங் போது அனைத்துச் சான்றிதழ்களுடன் மதிப்பெண் சான்றிதழையும், பள்ளி இட மாற்றுச்சான்றிதழ் எடுத்துவர வேண்டும். இதுவரை முதல் பட்டதாரிக்கான சான்றிழையும், சாதி சான்றிதழ் போன்றவற்றைப் பெறாமல் இருந்தால் உடனே விண்ணப்பித்து சான்றிதழ்களைப் பெற்று பிரதிகளை விண்ணப்பத்துடன் இணைக்கவும்.

விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோருக்கான இடங்களுக்கு முன்னதாகவே கவுன்சிலிங் நடைபெறும். அதன் பின்பு பொது கவுன்சிலிங் தொடங்கப்படும். வெக்கேஷனல் பிரிவு படித்தவர்களுக்குத் தனியாகவும் கவுன்சிலிங் நடைபெறும் என்பதை எல்லாம் முன்னரே தெரிந்துகொண்டு விண்ணப்பிப்பது நல்லது.

தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளும், பல்வேறு பாடப்பிரிவுகளில் 1,50,000-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. இதில் இடம்பெறத் தவறாமல் விண்ணப்பிப்பது அவசியம். பொதுப்பிரிவை சார்ந்த மாணவராக இருந்தால் 50% மதிப்பெண்ணையும், பிற்படுத்தப்பட்ட பிரிவினைச் சார்ந்த மாணவர் 45% மதிப்பெண்ணையும், இதர பிரிவினர் 40% மதிப்பெண்ணையும் குறைந்தப்பட்ச மதிப்பெண்ணாக பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் பெறுவதற்கும், இதர விவரங்களை தெரிந்துகொள்ளவும் https://www.annauniv.edu/ என்ற இணையத்தளத்தில் உள்ளே சென்று TNEA 2017 என்ற இணைப்பினை கிளிக் செய்தால் அனைத்துத் தகவல்களையும் பெறலாம்.
Posted Date : 00:25 (21/04/2017)

தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!
ர.பரத் ராஜ்




தவறான தகவல்கள், மோசமான வீடியோக்களை வாட்ஸ்-அப் அல்லது ஃபேஸ்புக் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில் தண்டனை வழங்கலாம் என்று வாரணாசியின் மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த விஷயம் குறித்து அந்த அறிக்கையில், 'பல வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக் குரூப்களில் உண்மை இல்லாத பல செய்திகள் பரவவிடப்படுகின்றன. இந்த மாதிரி தகவல்கள் சரியாகத்தான் இருக்கிறதா என்று பார்க்கமாலேயே பகிரப்படுகின்றன. அப்படிப்பட்ட தகவல்களை பரவவிடும் குரூப்பில் இருக்கும் நபரை குரூப் அட்மின் நீக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட நபர் பற்றி அருகில் இருக்கும் காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும். குரூப் அட்மின் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் அல்லது வாட்ஸ்-அப் குரூப்பில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் மோசமான வீடியோக்களால் பல பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 20 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்-அப் பயனர்கள் இருக்கின்றனர்.

People take photos as elderly man drowns in pond

He was inebriated when he went for a swim: Police

In yet another instance of public insensitivity, hundreds of people silently watched a 70-year-old man’s futile attempts to stay afloat in a pond while some reached out for mobile phones to record the incident. No one reportedly came to the rescue of the labourer, who after a few minutes of struggle, drowned in a temple pond (Pushkarani) in Kolar district on Thursday.
Nanjappa, a resident of Harohalli, was visiting the pond of Sri Venugopal Temple on the busy Tekal road in the vicinity of Harohalli locality around 1 p.m. According to eyewitnesses, he stepped into the pond for a swim, but soon started struggling in the water. People said he waved his hands seeking help. Though a large number of passers-by gathered, no one ventured to help him. Fire and Emergency Services and the police retrieved the body after a long search.
“Whether it would have been possible to save the drowning man or not is a different question. However, it is inhuman to take pictures and film such tragedies,” said Harohalli resident and activist Ravi.
The police claim that Nanjappa was inebriated when he went for a swim. “There was no time for the public to make any efforts to rescue the man as he drowned as soon as he entered the pond,” said Town Sub-Inspector of Police Pradeep. A case of unnatural death was registered.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நாளை முடிவு

பதிவு செய்த நாள்  20ஏப்  2017   23:27

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், நாளை முடிகிறது. ஏப்., 24 முதல் மதிப்பெண் தொகுப்பு பணி துவங்க உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 31ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தம், ஏப்., 5ல் துவங்கியது. 9.33 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, 75 மையங்களில் நடந்தது; 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இந்த பணி, நாளை முடிகிறது. இதை தொடர்ந்து, ஏப்., 24 முதல் மாவட்ட வாரியாக, மதிப்பெண் தொகுப்பு பணி நடக்க உள்ளது. பின், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும். அனைத்து பணிகளையும், மே, 5க்குள் முடிக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...