Monday, January 1, 2018

ரஜினி எதிர்கொள்ள வேண்டிய மூன்று சவால்கள்

By  சென்னை,  |   Published on : 01st January 2018 01:20 AM
vairamuthuC
அரசியலில் காலடியெடுத்து வைத்திருக்கும் ரஜினி மூன்று சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறினார்.

 இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:


 "ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறித்து, அவரின் நண்பர்களில் ஒருவன் என்ற முறையில் வரவேற்கிறேன். இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஊடகங்களில் ரஜினிக்கு வாழ்த்துகளும், வசை மொழிகளும் குவிந்து வருவதைக் கண்டேன். வாழ்த்துவதற்கும், வசைபாடுவதற்கும் போதுமான கால அவகாசத்தை ரஜினிக்குக் கொடுக்கவில்லை என்பது என் எண்ணம். வாழ்த்துகிறவர்களெல்லாம், அவரை நாளை வசைபாடலாம். வசைபாடுகிறவர்கள், நாளை வாழ்த்தலாம். இந்த கருத்துகள் இடமாற்றத்துக்கு கொஞ்சம் கால அவசகாசம் தேவைப்படும்.


 தொலைபேசியில் வாழ்த்து: அரசியல் அறிவிப்பு வெளியான பின்னர் தொலைபேசியில் ரஜினியைத் தொடர்புகொண்டு வாழ்த்துச் சொன்னேன். நாற்பதாண்டு காலம் கலைத் துறையில் நீங்கள் செலுத்திய உழைப்பைப் போல, இரு மடங்கு உழைப்பை இந்த அரசியல் வெளிக்கு தரவேண்டி இருக்கும் என்று சொன்னேன். அதற்காக உங்கள் உடல் நலனும், மன வளமும் செறிந்திருக்க வேண்டும்; செழித்திருக்க வேண்டும் என்று வாழ்த்தினேன்.
 கலைஞன்- தலைவன் இடைவெளி... ரஜினி மிகப்பெரிய கலைஞன், இப்போது தலைவனாக அவர், தனது வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறார். கலைஞன், தலைவன் என இந்த இரண்டுக்குமான இடைவெளி மற்ற மாநிலங்களில் மிக மிக அதிகம். தமிழகத்தில் சிலருக்கு இந்த இடைவெளி மிகக்குறைவு. ரஜினிக்கு, கலைஞன் என்பதற்கும், தலைவன் என்பதற்குமான இடைவெளி குறுகியதா; நீண்டதா என்பதைக் காலம் சொல்லும்.


 அரசியலில் காலடியெடுத்து வைத்திருக்கும் ரஜினியின் முன்பாக மூன்று பிரச்னைகள் முன்னிற்பதாக நான் கருதுகிறேன். முதலில் தனது எதிரி அல்லது எந்த கருத்தியலை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்று அவர் முடிவு செய்ய வேண்டும். நண்பன் யார் என்பதை பின்னர் கூட முடிவு செய்துகொள்ளலாம். ஆனால், எதிரியை முதலாவதாக முடிவு செய்ய வேண்டும். இரண்டாவதாக மற்ற அரசியல் தலைவர்கள் யாரும் சாதிக்க முடியாததை, நான் எப்படி சாதித்துக் காட்டுவேன் என்பதற்கான கொள்கை விளக்கம். அந்தக் கொள்கை விளக்கத்தைத் திட்டவட்டமாகத் தெளிவாகத் தீர்மானித்து, தமிழக மக்களுக்கு அவர் அறிவிக்க வேண்டும். சொல்லப்போனால், தலைவன் மற்றும் கலைஞன் ஆகிய இரண்டுக்குமான இடைவெளியை இந்த கொள்கைதான் இட்டு நிரப்பும் என்று நான் நம்புகிறேன்.
 மூன்றாவது, கொள்கை என்று ஒன்று அறிவிக்கப்பட்டால், அதைக் கொண்டுசெலுத்துவதற்கு, அதை அடைவதற்கு சிறந்த சிந்தனையாளர்களும், சிறந்த செயல் வீரர்களும் ஒரு இயக்கத்துக்கு, ஒரு தலைவருக்குத் தேவை. இந்த மூன்றும் ரஜினி எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவால்கள்' என்றார்.
தமிழக அரசின் தற்போதையகடன் சுமை... ரூ.2 லட்சம் கோடி!
தமிழக அரசின் கடன் சுமை, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. தற்போதைய கடன் சுமை, இரண்டு லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது, அனைத்து தரப்பினரிடமும், கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கடனுக்கு செலுத்த வேண்டிய அதிக வட்டி காரணமாக, அரசு நிர்வாகத்தினரும் திணறி வருகின்றனர். எனவே, இலவச திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக,அரசின்,தற்போதைய,கடன் சுமை, ரூ.2 லட்சம் கோடி!

தமிழக அரசு, நிதி பற்றாக்குறையால், தவித்து வருகிறது. ஆண்டுதோறும் கடன் சுமை அதிகரித்தபடி உள்ளது. 1984 - 85ம் நிதிஆண்டில், 


2,129.59 கோடி ரூபாய் கடன் இருந்தது. பின், 2015 - 16ல், அரசின் கடன் சுமை, ஒரு லட்சத்து, 94 ஆயிரத்து, 95 கோடியே, 65 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, கடன் சுமை, இரண்டு லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது.நடப்பு நிதியாண்டில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு காரணமாக, தமிழக அரசுக்கு வருவாய் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக, தகவல் வெளியாகிஉள்ளது.


சென்னை, அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், நர்மதா நந்தகுமார், தமிழகத்தில், காங்., ஆட்சியிலிருந்த காலம் முதல், 2017 வரை, ஒவ்வொரு நிதியாண்டிலும், தமிழக அரசின் கடன் சுமை எவ்வளவு என்ற விபரத்தை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டார்.


நிதித்துறை சார்பு செயலர், ராமநாதன், அதற்கு பதில் அனுப்பி உள்ளார். அதில், '1984 - 85ல் இருந்து, 2015 - 16 நிதியாண்டு வரை, ஒவ்வொரு ஆண்டிலும், தமிழக அரசுக்கு, எவ்வளவு கடன் இருந்தது' என்ற, விபரத்தை தெரிவித்துள்ளார்.அதன்படி, ஒவ்வொரு


ஆண்டும், தமிழக அரசின் கடன் சுமை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. ஒருமுறை கூட, கடன் சுமை குறையவில்லை.
1984ல், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தார். அவருக்கு பின், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,
கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.

இரு கட்சி ஆட்சியிலும், போட்டி போட்டு கடன் பெற்றுள்ளனர். கடன் சுமையை குறைக்க, இரண்டு கட்சிகளும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், 2016 - 17க்கான கணக்குகள், இதுவரை இறுதி செய்யப்பட வில்லை என, அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, தமிழக அரசின் கடன் சுமை, இரண்டு லட்சம் கோடி ரூபாயுடன் அரசு செலுத்த வேண்டிய வட்டி தொகையும் அதிகரித்தபடி உள்ளது. இதனால், அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலவச திட்டங் களால் தான், இவ்வளவு சிக்கல் ஏற்பட்டுள்ள தாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆட்சியிலிருப்போர், கடன் சுமையை குறைக்க, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்படும்.


- நமது நிருபர் -

சென்னை:ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில், அதிர்வு அலைகளை உருவாக்கி உள்ளது. பலர் வரவேற்று உள்ளனர்; சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரஜினி அரசியல் பிரவேசம்: தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும்

தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின்:

ரசிகர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு, ரஜினி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்; பாராட்டுகள். ரஜினியின் அரசியல் வருகையால், சாதகமோ பாதகமோ இல்லை. அதைப் பற்றி, தி.மு.க., கவலைப்படாது. தி.மு.க.,வை பொறுத்தவரை, அது ஏற்றுள்ள கொள்கையின் வழிமுறைப்படி, வெற்றிப் பாதையில் பயணிக்கும்.


அ.தி.மு.க., அமைச்சர் ஜெயகுமார்
:

யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம்; மக்களே இறுதி எஜமானர்கள். அவர்கள் தான், அரசை தீர்மானிக்க முடியும். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நடிகர் ரஜினிக்கு வாழ்த்துகள். அவர், அ.தி.மு.க.,வை விமர்சித்ததாகக் கூறுவதை ஏற்க முடியாது; தி.மு.க.,வை கூட விமர்சித்திருக்கலாம்.


ஆர்.கே.நகர் தொகுதி, சுயேச்சை எம்.எல்.ஏ., தினகரன்:

அரசியலுக்கு ரஜினி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலில், பல கட்சிகள் உருவாகலாம். வெற்றி என்பது மக்களின் கைகளில் தான் உள்ளது. ரஜினிக்கு என் வாழ்த்துகள்.


தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை சவுந்தரராஜன்:

ஊழலற்ற நிர்வாகத்தை தரவே, அரசியலுக்கு வருகிறேன் என, ரஜினி கூறி யிருப்பதை வரவேற்கிறோம். தமிழகத்தில், ஊழலை எதிர்த்து போராட, மேலும் பலம் தேவை. லோக்சபா தேர்தல் குறித்து, தேர்தல் நடக்கும் போது முடிவெடுப்பதாக கூறியுள்ளார். அவர், பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பார் என்பது என் கணிப்பு.


தமிழக காங்., முன்னாள் தலைவர், இளங்கோவன்:

சட்டசபை தேர்தல் வரும் போது, கட்சி துவக்கப்போவதாக கூறியிருக்கிறார். புத்தாண்டில் அவரது படங்கள் வெளிவரவுள்ளன. அதற்காக, புதுவிதமாக அவர் கையாண்டுள்ள விளம்பர யுக்தி. முழுமையாக அரசியலுக்கு வரட்டும்; அப்போது பார்ப்போம்.


இ. கம்யூனிஸ்ட் மாநில செயலர், முத்தரசன்:
ரஜினி, அரசியல் சீரழிவுகளை விமர்சித்து இருக்கிறார். 'சட்டசபை தேர்தலுக்கு முன் கட்சி துவக்குவேன்; ஆன்மிக அரசியல் நடத்துவேன்' என்கிறார். ஆன்மிகமும், அரசியலும் ஒன்றாக இருக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகள் தான், மக்களோடு நேரடி தொடர்பு கொண்டவை; ஆனால், அதில், போட்டியிடப் போவதில்லை என, கூறி உள்ளார். அவரது அறிவிப்பு, ரசிகர்களை ஒருங் கிணைக்கும் நடவடிக்கையாகவே கருதுகிறோம்


விடுதலை சிறுத்தைகள் தலைவர், திருமாவளவன்:

ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்கிறேன். ஆன்மிக அரசியல் என்பதையும், மதவாத சக்திகளுக்கு எதிரான அரசியல் என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதன்படி, இடதுசாரிகளுடனும் சேராமல், பா.ஜ.,வுடனும் சேராமல், தனி வழியில் அவரது அரசியல் இருக்கும் என, கருதுகிறேன். அவரது நிலைப்பாடுகள் தெரிந்த பின், ஆதரவு கொடுப்பது குறித்து முடிவு எடுப்போம்.


த.மா.கா., தலைவர், வாசன்:
ரஜினி, அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறேன். ஜனநாயகத்தில், அரசியல் கட்சியை துவக்குவதற்கும், அதன் சார்பில் மக்களை சந்திப்பதற்கும் யாரும் இடையூறாக இருக்க முடியாது. மக்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்பட்டால் அங்கீகாரம் பெறலாம்; மக்கள் தான் எஜமானர்கள்.


முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி:


ரஜினியின் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துகள். அவர், என் நெருங்கிய நண்பர்.கருணாநிதிக்கும், அவரை பிடிக்கும். அவரது வருகை, அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். விரைவில், அவரை நேரில் சந்திப்பேன்.இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகர்களும் அரசியலும்

இந்தியாவில், அரசியல் கட்சி தொடங்கிய, சில முன்னணி நடிகர்கள்.என்.டி.ராமாராவ் -ஆந்திராவில், 1982ல், தெலுங்கு தேசம்கட்சியை துவக்கினார். 1983ல் முதல்வரானார். மூன்று முறை முதல்வராக இருந்தார். இவரது மறைவுக்குப் பின்பும், கட்சி இயங்குகிறது. முதல்வராக, சந்திரபாபு நாயுடு இருக்கிறார்.

சிரஞ்சீவி - பிரஜா ராஜ்யம்

ஆந்திராவில், 2008ல், பிரஜா ராஜ்யம் கட்சியை துவக்கினார். முதல் தேர்தலில், 18 தொகுதிகளில்


கட்சி வென்றது. பின், 2011ல், காங்., உடன் கட்சியை இணைத்தார்.


எம்.ஜி.ஆர்.,

தமிழகத்தில் அ.தி.மு.க.,வை, 1972ல், எம்.ஜி.ஆர்., துவக்கினார். 1977ல், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இவரது கட்சி ஆட்சியை பிடித்தது. 1987ல் மறையும் வரை, தொடர்ச்சி யாக மூன்றுமுறை முதல்வராக இருந்தார். மறைவுக்குப் பின், கட்சி இயங்குகிறது.

சிவாஜி கணேசன்

சினிமாவில் சாதித்த இவர், 1988ல், தமிழக முன்னேற்ற முன்னணியை துவக்கினார். ஆனால், அரசியலில் சாதிக்க முடியவில்லை. கட்சியை கலைத்துவிட்டார்.

விஜயகாந்த்

தே.மு.தி.க.,வை, 2005ல் துவக்கினார். 2006 தேர்தலில், விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். 2011 தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து, 29 இடங்களில் வென்றது இக்கட்சி. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவ ரானார். 2016 தேர்தலில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

சரத்குமார்


கடந்த, 2007ல், சமத்துவ மக்கள் கட்சியை துவக்கினார். 2011 தேர்தலில், இவர் உட்பட இருவர் வெற்றி பெற்றனர். 2016 தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி இல்லை.


டி.ராஜேந்தர்:தி.மு.க., வில் இருந்து பிரிந்து, 2004ல், லட்சிய தி.மு.க., கட்சியை துவக்கினார். தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியவில்லை.

கார்த்திக்: கடந்த, 2009ல், நாடாளும் மக்கள் கட்சியை துவக்கினார். தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியவில்லை.

சீமான்

இவர், 2010ல், நாம் தமிழர் கட்சியை துவக்கினார். 2016 தேர்தல் களத்தில், தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிட்டது.

டிரான்ஸ்பரான அதிகாரிக்கு மீண்டும் சேலத்தில் பணி!

Added : ஜன 01, 2018 03:59

சேலம்: சேலத்தில் நடந்த முதல்வர் விழாவில் ஏற்பட்ட குளறுபடியை காரணம் காட்டி, திருநெல்வேலிக்கு துாக்கியடிக்கப்பட்ட, போலீஸ் உதவி கமிஷனருக்கு, மீண்டும் சேலத்தில் பணி ஒதுக்கி, டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.சேலம், திருவாக்கவுண்டனுார் ரவுண்டானாவில், முதல்வர் பழனிசாமி, கடந்த 2ல் மேம்பாலத்தை திறந்துவைத்தார். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகளை, வடக்கு குற்றப் பிரிவு உதவி கமிஷனர் பிரேம் ஆனந்த் கவனித்தார். ஆனால், ரிப்பன் வெட்டுதல் உள்பட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.இதனால், குளறுபடி நிலவியதால், முதல்வர் பழனிசாமி அதிகாரிகளை கடிந்து கொண்டார். இச்சம்பவத்தால், பிரேம் ஆனந்தை, திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு பிரிவுக்கு மாற்றி, டி.ஜி.பி., ராஜேந்திரன் 


உத்தரவிட்டார்.மாற்றத்தை மறுபரிசீலனை செய்யும்படி, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, அவரை, மீண்டும், சேலம் மாநகர வடக்கு குற்றப்
பிரிவில் பணியில் இணைய, டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
பவுர்ணமி கிரிவலத்துடன் தி.மலையில் புத்தாண்டு

Added : ஜன 01, 2018 00:26


வேலுார்: திருவண்ணாமலையில், இந்த புத்தாண்டு, பவுர்ணமி கிரிவலத்துடன் துவங்குகிறது. 2018ம் ஆண்டில், மொத்தம், 13 பவுர்ணமிகள் வருகின்றன.


பஞ்ச பூத தலங்களில், அக்னி தலமாக, தி.மலை அண்ணாமலையார் கோவில் விளங்குகிறது.
இங்கு, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில், கிரிவலம் வந்து, அண்ணாமலையாரை வழிபட்டால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.


திருவண்ணாமலையில் இந்த புத்தாண்டு, பவுர்ணமி கிரிவலத்துடன் துவங்குகிறது. இந்த ஆண்டில், மொத்தம், 13 பவுர்ணமி வருகிறது. 


குறிப்பாக, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில், இரண்டு பவுர்ணமி வருகிறது; பிப்ரவரியில் பவுர்ணமி இல்லை.


இந்த ஆண்டில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்று, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ள பட்டியல்:


 ஜன., 1ம் தேதி திங்கள் காலை, 10:30 மணி முதல், 2ம் தேதி செவ்வாய் காலை, 8:30 மணி வரை


 ஜன., 30ம் தேதி செவ்வாய் இரவு, 9:36 மணி முதல், 31ம் தேதி புதன் இரவு, 7:26 மணி வரை


 மார்ச், 1ம் தேதி வியாழன் காலை, 8:13 மணி முதல், 2ம் தேதி வெள்ளி காலை, 6:30 மணி வரை
சித்ரா பவுர்ணமி


 மார்ச், 30ம் தேதி வெள்ளி இரவு, 7:16 மணி முதல், 31ம் தேதி சனி மாலை, 6:19 மணி வரை


 ஏப்., 29ம் தேதி ஞாயிறு காலை, 7:05 மணி முதல், 30ம் தேதி திங்கள் காலை, 6:50 மணி வரை


 மே, 28ம் தேதி திங்கள் இரவு, 7:37 மணி முதல், 29ம் தேதி செவ்வாய் இரவு, 8:30 மணி வரை


 ஜூன், 27ம் தேதி புதன் காலை, 9:35 மணி முதல், 28ம் தேதி வியாழன் காலை, 10:20 மணி வரை


 ஜூலை, 26ம் தேதி வியாழன் இரவு, 12:20 மணி முதல், 27ம் தேதி வெள்ளி இரவு, 2:25 மணி வரை


 ஆக., 25ம் தேதி சனி மாலை, 4:05 மணி முதல், 26ம் தேதி ஞாயிறு மாலை, 5:40 மணி வரை


 செப்., 24ம் தேதி திங்கள் காலை, 8:02 மணி முதல், 25ம் தேதி செவ்வாய் காலை, 8:45 மணி வரை


 அக்., 23ம் தேதி செவ்வாய் இரவு, 10:45 மணி முதல், 24ம் தேதி புதன் இரவு, 10:50 மணி வரை


கார்த்திகை பவுர்ணமி


 நவ., 22ம் தேதி வியாழன் மதியம், 12:45 மணி முதல், 23ம் தேதி வெள்ளி மதியம், 12:02 மணி வரை


 டிச., 22ம் தேதி சனி காலை, 10:45 மணி முதல், 23ம் தேதி ஞாயிறு காலை, 8:30 மணி வரை
ரஜினி ஒரு ஊழல்வாதி: சுவாமி கோபம்

Added : ஜன 01, 2018 04:11


சென்னை: ''நடிகர் ரஜினிக்கு நான் எப்போதுமே எதிர்ப்பைத்தான் தெரிவிப்பேன்,'' என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறிஉள்ளார்.

அவர் கூறியதாவது: நடிகர் ரஜினி ஒரு படிப்பறிவில்லாதவர். ஊழல்வாதி. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை மீடியாக்களே மிகவும் பெரிது படுத்துகின்றன. அவர் நம்மிடம் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இதுவும் தமிழ் நடிகர் ஒருவர் அரசியலில் இணைந்தார் என கூறும் ஒரு பழைய கதை மட்டும்தான். நான் எப்போதும் ரஜினிக்கு எதிர்ப்புதான் தெரிவிக்கிறேன். சினிமா நடிகர்களை என்று மக்கள் விடுவிக்கிறார்களோ அப்போதுதான் தமிழகம் முன்னேறும். இன்னும் அவருடைய கட்சியை அறிவிக்கவில்லை. பா.ஜ.,வுடன் அவரை கூட்டணி அமைக்கவிட மாட்டேன். தவறான நேரம் மற்றும் இடத்தில் இருந்து ரஜினி, அரசியலுக்கு வருகிறார். அவருடைய கறுப்பு பண விவகாரம் விசாரணைக்கு வந்ததும் அவர் கவலையடைவார். ரஜினியின் பாடல்கள் மற்றும் நடனங்களில் மக்கள் விழுந்துவிடக்கூடாது. ஒரு நடிகர் சங்கம் அரசியல் கட்சியாக முடியாது. என் எதிர்ப்பையும் மீறி ரஜினியுடன் பா.ஜ., கூட்டணி வைத்தால் கட்சியில் இருந்து விலகி வேறு மாநிலம் சென்று அரசியல் செய்வேன்.இவ்வாறு கூறினார்.
வசனம் எடுபடாது: அமைச்சர் ராஜு காட்டம்

Added : ஜன 01, 2018 03:29




மதுரை: ''திரைப்படத்தில் வேண்டுமானால், லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவேன் என, வசனம் பேசலாம். அரசியலில் ரஜினி வசனம் எடுபடாது,'' என, மதுரையில், கூட்டுறவு துறை அமைச்சர், ராஜு தெரிவித்தார்.

நேற்று அவர் கூறியதாவது: ஜனநாயக நாட்டில், ரஜினி மட்டுமல்ல, யாரும் அரசியலுக்கு வரலாம். அவரது செயல்பாட்டை பொறுத்து தான், அவரை ஏற்பதா, புறக்கணிப்பதா என, மக்கள் முடிவெடுப்பர். 


முதல்வர், பழனிசாமி ஆட்சியில், சிஸ்டம் சரியாக தான் உள்ளது. எந்த சிஸ்டம் சரியில்லை என, ரஜினி கூறுகிறாரோ அதில் உண்மை இருந்தால், திருத்திக் கொள்வோம்.
இது, மக்களுக்கான அரசு. திரைப்படத்தில் வேண்டுமானால், 'லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா' வருவேன் என வசனம் பேசலாம். 


அரசியலில் அப்படி பேசுவதோ, செயல்படுவதோ கடினம். ஒரு இயக்கம் நடத்துவதில் உள்ள கஷ்டம், இனி தான் அவருக்கு புரியும். திரைப்பட வசனம் வேறு, அரசியல் வேறு என, ரஜினி புரிந்துகொள்ள வேண்டும்.


இந்த அரசை குறை கூறிய, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு மக்கள், 'டிபாசிட்' கூட வழங்காமல் புறக்கணித்துள்ளனர். எம்.ஜி.ஆருக்கு அடுத்து, நடிகர்கள் யாரையும் இதுவரை மக்கள் ஏற்றுக் கொண்டதில்லை. தினகரன் வெற்றி தற்காலிகமானது தான்.
இவ்வாறு அவர் கூறினார்.



NEWS TODAY 2.5.2024