Monday, January 1, 2018

தமிழக அரசின் தற்போதையகடன் சுமை... ரூ.2 லட்சம் கோடி!
தமிழக அரசின் கடன் சுமை, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. தற்போதைய கடன் சுமை, இரண்டு லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது, அனைத்து தரப்பினரிடமும், கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கடனுக்கு செலுத்த வேண்டிய அதிக வட்டி காரணமாக, அரசு நிர்வாகத்தினரும் திணறி வருகின்றனர். எனவே, இலவச திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக,அரசின்,தற்போதைய,கடன் சுமை, ரூ.2 லட்சம் கோடி!

தமிழக அரசு, நிதி பற்றாக்குறையால், தவித்து வருகிறது. ஆண்டுதோறும் கடன் சுமை அதிகரித்தபடி உள்ளது. 1984 - 85ம் நிதிஆண்டில், 


2,129.59 கோடி ரூபாய் கடன் இருந்தது. பின், 2015 - 16ல், அரசின் கடன் சுமை, ஒரு லட்சத்து, 94 ஆயிரத்து, 95 கோடியே, 65 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, கடன் சுமை, இரண்டு லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது.நடப்பு நிதியாண்டில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு காரணமாக, தமிழக அரசுக்கு வருவாய் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக, தகவல் வெளியாகிஉள்ளது.


சென்னை, அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், நர்மதா நந்தகுமார், தமிழகத்தில், காங்., ஆட்சியிலிருந்த காலம் முதல், 2017 வரை, ஒவ்வொரு நிதியாண்டிலும், தமிழக அரசின் கடன் சுமை எவ்வளவு என்ற விபரத்தை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டார்.


நிதித்துறை சார்பு செயலர், ராமநாதன், அதற்கு பதில் அனுப்பி உள்ளார். அதில், '1984 - 85ல் இருந்து, 2015 - 16 நிதியாண்டு வரை, ஒவ்வொரு ஆண்டிலும், தமிழக அரசுக்கு, எவ்வளவு கடன் இருந்தது' என்ற, விபரத்தை தெரிவித்துள்ளார்.அதன்படி, ஒவ்வொரு


ஆண்டும், தமிழக அரசின் கடன் சுமை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. ஒருமுறை கூட, கடன் சுமை குறையவில்லை.
1984ல், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தார். அவருக்கு பின், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,
கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.

இரு கட்சி ஆட்சியிலும், போட்டி போட்டு கடன் பெற்றுள்ளனர். கடன் சுமையை குறைக்க, இரண்டு கட்சிகளும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், 2016 - 17க்கான கணக்குகள், இதுவரை இறுதி செய்யப்பட வில்லை என, அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, தமிழக அரசின் கடன் சுமை, இரண்டு லட்சம் கோடி ரூபாயுடன் அரசு செலுத்த வேண்டிய வட்டி தொகையும் அதிகரித்தபடி உள்ளது. இதனால், அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலவச திட்டங் களால் தான், இவ்வளவு சிக்கல் ஏற்பட்டுள்ள தாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆட்சியிலிருப்போர், கடன் சுமையை குறைக்க, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்படும்.


- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 30.12.2024