Friday, January 26, 2018

ரூ.6 லட்சம் கோடி சந்தை மதிப்பை தாண்டியது டிசிஎஸ்

Published : 25 Jan 2018 09:54 IST

மும்பை





டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6 லட்சம் கோடியை தாண்டியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு அடுத்து ரூ.6 லட்சம் கோடியை தாண்டும் இரண்டாவது நிறுவனம் டிசிஎஸ் ஆகும். நேற்று காலை வர்த்தகத்தில் டிசிஎஸ் சந்தை மதிப்பு ரூ.6.12 லட்சம் கோடியைத் தாண்டி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பை விட அதிகமாக இருந்தது.

ஆனால் வர்த்தகத்தில் முடிவில் சந்தை மதிப்பு அடிப்படையில் ரிலையன்ஸ் (ரூ.6.10 லட்சம் கோடி) முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் டிசிஎஸ் (ரூ.6.07 லட்சம் கோடி) இருக்கிறது. மூன்றாவது இடத்தில் இருக்கும் ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.5.08 லட்சம் கோடியாக இருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் இடையே 52 வார உச்ச பட்ச விலையை டிசிஎஸ் தொட்டது. ரூ.3,259 வரை டிசிஎஸ் பங்கு சென்றது. வர்த்தகத்தின் முடிவில் 2.34 சதவீதம் உயர்ந்து 3,174 ரூபாயில் டிசிஎஸ் பங்கின் வர்த்தகம் முடிந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024