Monday, January 29, 2018

மாதாந்திர பயண அட்டை ரூ.1000க்கு தொடர்ந்து வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

By DIN | Published on : 28th January 2018 10:01 PM |



பொதுமக்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை குறைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், புதிய கட்டணம் நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், போக்குவரத்துக் கழகங்களை கடும் நெருக்கடியில் இருந்து மீளச்செய்து பொது மக்களுக்கு சிறப்பான சேவை அளிக்கவும், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் உதிரி பாகங்களின் விலை ஏற்றம் காரணமாகவும் கடந்த 20-ஆம் தேதி பேருந்துக் கட்டணம் மாற்றியமைக்கபட்டதாக குறிப்பிட்டுள்ளது.

எனினும், பெரும்பான்மையான மக்கள், எதிர்கட்சிகளின் வேண்டுகோளை கருத்தில் கொண்டும், போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டும், தமிழக அரசு நன்கு பரிசீலித்து பேருந்து கட்டணங்களை குறைத்து மாறுதல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளொன்றுக்கு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும், இப்புதிய கட்டண அறிவிப்பு நாளை முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதியோர்களுக்கான கட்டணமில்லா பேருந்து அட்டைகள் தொடரும். பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட பின்பும் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி பயிலும் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயண அட்டை மற்றும் முதியோர்களுக்கான கட்டணமில்லா பேருந்து அட்டை ஆகியவை தொடர்ந்து அளித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் முதியோர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்ட பின்பும் அவை தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆயிரம் ரூபாய்க்கான மாதாந்திர பேருந்து பயண அட்டையும் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...