Sunday, January 28, 2018

'என்' வகை ரேஷன் கார்டில் அரிசி வாங்க வழி உண்டா?

Added : ஜன 28, 2018 01:50


ரேஷனில் எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டுகளை, பொருட்கள் வாங்கும் கார்டுகளாக மாற்ற வாய்ப்புகள் உள்ளதாக, உணவுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், அரிசி கார்டு, போலீஸ் கார்டு, சர்க்கரை கார்டு மற்றும் எந்த பொருட்களும் வாங்காத, 'என்' கார்டு என, நான்கு விதமான ரேஷன் கார்டுகள் உள்ளன. 

இதில், அரிசி கார்டு மற்றும் போலீஸ் கார்டு களுக்கு, இலவச அரிசி உட்பட, அனைத்து பொருட்களும் தரப்படு கின்றன. சர்க்கரை கார்டுக்கு, அரிசி தவிர்த்த மற்ற பொருட்கள் வழங்கப்படுகின்றன. 

'என்' வகை கார்டுக்கு, எந்த பொருளும் வழங்கு வதில்லை. அவர்கள், தங்களது ரேஷன் கார்டை, முகவரி சான்றுக்கு மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டானது, முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதது என்ற இரு பிரிவில் வழங்கப்பட்டாலும்...
பழைய கார்டுகளின் வகையில் தான், பொருட் கள் தரப்படுகின்றன. ஸ்மார்ட் கார்டு வரவால், ஐந்து லட்சத்திற்கும் அதிகமான, போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டு உள்ளன.

இதையடுத்து, எந்த பொருளும் வாங்காத, 60 ஆயிரம், 'என்' கார்டுகளையும், அரிசி கார்டுகளாக மாற்ற, உணவுத் துறை முடிவு செய்தது. ஆனால், அரசு ஒப்புதல் அளிக்காததால், அது குறித்த அறிவிப்பு தாமதமாகி வருகிறது.
இந்நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர், 'என்' கார்டுகளை, அரிசி கார்டு களாக மாற்றம் செய்வது தொடர்பாக, உணவு வழங்கல் துறைக்கு, தகவல் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு, அத்துறை அளித்துள்ள பதில்:

'என்' கார்டு வைத்து உள்ளோர், பொருட்கள் பெறும் வகையில் மாற்றம் கோரி மனு அளித்தால், நேரில் ஆய்வு செய்யவும்...
குடும்பத்தின் தற் போதைய பொருளாதார நிலை கருதி, சம்பந்தப் பட்ட உதவி கமிஷனரின் பரிந்துரைப்படி, அத் தியாவசிய பொருட்கள் பெறும் கார்டாக மாற்றவும் வழிவகை உண்டு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'அரசு கையில் தான் தீர்வு'

இது குறித்து, கூட்டுறவு மற்றும் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
'என்' கார்டை, பொருட்கள் பெறும் கார்டாக மாற்றுவது தொடர்பாக, சட்டசபையில், முதல்வர் அல்லது உணவுத் துறை அமைச்சர் அறிவிக்க வேண்டும். பின், அதை செயல்படுத்த அரசாணை வெளியிட வேண்டும். அப்போது தான், 'என்' கார்டுகள், பொருட்கள் தரும் கார்டாக மாற்றப்படும். அதுவரை, மனுக்களை பெற்றாலும், பொருட்கள் பெறும் கார்டாக மாற்ற, அதிகாரிகள் பரிந்துரைக்க முன்வரமாட்டர்.

நிதி நெருக்கடியை காரணம் காட்டி, 'என்' கார்டுக்கு பொருட்கள் வழங்கும் திட்டத்தை, அரசு செயல்படுத்தாமல் உள்ளது. 60 ஆயிரம் கார்டுகளுக்கு பொருட்கள் தருவதால், அரசுக்கு அதிக செலவு ஏற்பட போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024