Sunday, January 28, 2018

வரி ஏய்ப்பு: கண்டுபிடித்த அதிகாரிக்கு விருது

Added : ஜன 28, 2018 03:33


புதுடில்லி: அரசுக்கு, 961 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்த வழக்குகளை கண்டுபிடித்த அதிகாரியின் சேவையை பாராட்டி, அவருக்கு ஜனாதிபதி விருது, நேற்று வழங்கப்பட்டது.

சரக்கு மற்றும் சேவை வரி இயக்குனரகத்தின் புலனாய்வு பிரிவில், 25 ஆண்டுகளாக பணியாற்றுபவர், ரவி தத் சங்கர்; வரி ஏய்ப்பு தொடர்பாக, 47 வழக்குகளை புலனாய்வு செய்துள்ளார்.

இதன் மூலம், 961.92 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதை கண்டுபிடித்துள்ளார். இதில், 99 கோடி ரூபாய் வரி, திரும்ப செலுத்தப்பட்டது.இவரது பணியை பாராட்டி, ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் சார்பில், நிதி அமைச்சர், அருண் ஜெட்லி விருது வழங்கி கவுரவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024