Monday, January 29, 2018

சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்தில்5 வருடங்களாக திறக்கப்படாத கழிப்பறைகள்:நோயாளிகளின் உதவியாளர்கள் அதிருப்தி

Added : ஜன 29, 2018 02:15

சிவகங்கை; சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு 5 வருடங்களுக்கு மேலாகியும் கட்டண கழிப்பறை திறக்கப்படாததால், நோயாளிகளின் உதவியாளர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு தினமும் 1000 க்கும் அதிகமான புறநோயாளிகள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இவர்களில் பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகள், அதிக பாதிப்பிற்குள்ளானவர்கள் வார்டுகளில் தங்க வைக்கப்படுகின்றனர்.

 மருத்துவமனையில் வார்டுகளுக்கு அருகில் கழிப்பறை இருந்தாலும், அவற்றை வார்டுகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். நோயாளிகளின் உதவியாளர்கள், பார்க்க வருவோர் இயற்கை உபாதைகளுக்கு கழிப்பறைகளை பயன்படுத்த அனுமதியில்லை. இதனால், பல கழிப்பறைகள் நிரந்தரமாக பூட்டப்பட்டுள்ளன. மருத்துவமனை வளாகத்திற்குள் கட்டப்பட்டுள்ள கட்டண கழிப்பறைகள் மருத்துவக்கல்லுாரியும், மருத்துவமனையும் துவங்கப்பட்ட ஆண்டு முதல் கடந்த 5 வருடங்களாகவே திறக்கப்படவில்லை.

 இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உதவியாளர்கள் மருத்துவமனைக்கு வெளியே காலி இடங்களில் திறந்தவெளியை கழிப்பிடமாக இரவிலும், பகலிலும் பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. இயற்கை உபாதைக்காக அவசர சிகிச்சைப்பிரிவு நுழைவு வாயில் வழியாக வெளியே செல்லும் நோயாளிகளின் உதவியாளர்கள், பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் வார்டுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதால் அவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைக்கின்றனர். இதனால், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும், மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்களான காவலர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண புதிதாக பதவி ஏற்றுள்ள டீன் டாக்டர் வனிதா இதுவரை திறக்கப்படாத கட்டண கழிப்பறைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளின் உதவியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.---

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024