Monday, January 29, 2018

கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி

By DIN  |   Published on : 29th January 2018 03:55 AM  | 
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பின் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
சென்னையின் மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளிமாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் வருகின்றன. கடந்த நவம்பர் - டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழையால் பயிர்கள் சேதமடைந்ததால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்தது. இதனால் அந்த இரு மாதங்கள் காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் ஜனவரி முதல் வாரம் முதல் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது.
நவம்பர்,டிசம்பர் மாதங்களில் சில்லறை விற்பனைக் கடைகளில் கிலோ ரூ. 200 வரை விற்பனை செய்யப்பட்ட சின்னவெங்காயம், இப்போது வரத்து அதிகரிப்பின் காரணமாக விலை வேகமாக குறைந்து வருகிறது.
தற்போது சின்ன வெங்காயம் சில்லரைக்கு கிலோ ரூ. 30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த வாரங்களில் மேலும் சின்ன வெங்காயத்தின் விலைக் குறைய வாய்ப்புள்ளதாகவும், சின்ன வெங்காயத்தின் விலைக் குறைவுக்கு வரத்து அதிகரிப்பே காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சில்லறை விற்பனையில் ஞாயிற்றுக் கிழமை ரூ.800 - க்கு மல்லிகைப்பூ 
விற்பனை.
கடும் பனிப்பொழிவினால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் வரத்து குறைந்து காணப்படுகிறது. அதனால் பூக்களின் விலை ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து காணப்படுகிறது.
காய்கறி விலை விவரம்  - (1 கிலோ குறைந்தபட்ச, அதிகபட்ச விலை)
பெரிய வெங்காயம் - ரூ. 40-50
சின்ன வெங்காயம் - ரூ. 30-40
தக்காளி - ரூ. 8-10
கத்தரிக்காய் - ரூ. 15-20
அவரைக்காய் - ரூ. 20-30
முள்ளங்கி - ரூ.10-15
முட்டைக்கோஸ் - ரூ. 10-15
கேரட் - ரூ. 15-20
பீட்ரூட் - ரூ. 15-20
வெண்டைக்காய் - ரூ. 20-30
பீன்ஸ் - ரூ. 25-30
புடலங்காய் - ரூ.15-20
உருளைக்கிழங்கு - ரூ. 20-25
காலிப்ளவர் - ரூ.10-20
சேப்பங்கிழங்கு - ரூ. 30-40
கருணைக்கிழங்கு - ரூ.30-40
சௌசௌ - ரூ.15-20
நூக்கல் - ரூ.15-20
ஞாயிற்றுக்கிழமை பூக்கள் விலை விவரம் ( 1 கிலோ)
மல்லிகை - ரூ. 700 - 800
ஜாதிமல்லி - ரூ. 500-600
கனகாம்பரம் - ரூ. 100-150
சாமந்தி - ரூ. 20-30
ரோஜா - ரூ. 20-50
சம்பங்கி - ரூ. 20-30
கோழிக்கொண்டை - ரூ. 20-30
செண்டு மல்லி - ரூ. 10-15
கஸ்தூரி - ரூ. 70 - 80

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024