Friday, January 26, 2018

“அட்ஜெஸ்ட் பண்ணிக்க...!”- சபலப் பேராசிரியர் கைது 
 
RAGHAVAN M

மாணவி ஒருவரின் சிறு தவறை காரணமாக வைத்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய உதவிப் பேராசிரியர் காரைக்காலில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.



காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறை அடுத்த செருமாவிலங்கையில் பண்டித ஜவஹர்லால் நேரு அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்தக் கல்லூரியில் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பி.எஸ்.சி. (விவசாயம்) முதலாம் ஆண்டு படித்துவருகிறார். அதே துறையில் காரைக்கால் கோட்டுச்சேரியைச் சேர்ந்த குமரவேல் என்பவர் மண் அறிவியில் பிரிவில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

மாணவி மாலதியின் ரெக்கார்டு நோட்டில் உதவிப் பேராசிரியர் குமரவேல் போட்டிருந்த கையெழுத்து எதிர்பாராவிதமாக தண்ணீர்த் துளிகள் பட்டு அழிந்திருக்கிறது. எனவே, மாலதி உதவிப் பேராசிரியரின் கையெழுத்துப் போலவே தானாகவே போட்டிருக்கிறார். இதனைக் கண்டுபிடித்த உதவிப் பேராசிரியர் குமரவேல் மாலதியை தனிமையில் அழைத்து மிரட்டி, இது பற்றி நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமானால், 'என் ஆசைக்கு நீ ஒருமுறை இணங்க வேண்டும்' என்று வற்புறுத்தியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ந்துபோன மாலதி, அதற்கு சம்மதிக்கவில்லை. என்றாலும், ஆசிரியரின் தொடர் மிரட்டல் எல்லை மீறியதால் கல்லூரிக்கு விடுப்புக் கடிதம் கொடுத்துவிட்டு, புதுச்சேரியில் உள்ள வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கும் யாரிடமும் சொல்ல முடியாமல் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபடவே, அதனைக் கண்ட பெற்றோர் பதறிப்போய் காப்பாற்றினார்கள். நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியிருக்கிறார் மாலதி.

கொதித்துப்போன பெற்றோர், உடனடியாக புதுவை கவர்னர் கிரண்பேடியை நேரில் சந்தித்துப் புகார் கொடுத்துள்ளனர். கிரண்பேடி, உதவிப் பேராசிரியர் குமரவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்கமாறு உத்தரவிட்டார். அதன்படி உதவிப் பேராசிரியர் குமரவேலை கைதுசெய்து, அவர் மீது ஐ.பிசி. 353 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து திருநள்ளாறு காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

இதுபற்றி காரைக்கால் சீனியர் எஸ்.பி. சந்திரனிடம் கேட்டபோது, “தவறு ஏதும் நடக்கவில்லை என்றாலும், ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் தகாதமுறையில் நடந்துகொண்டதை சகிக்கமுடியாது. ஜாமீனில் விடக்கூடிய வழக்கு பதிவுச் செய்த போதிலும், குமரவேலுவை கைதுசெய்து ரிமாண்ட் செய்யச் சொல்லியிருக்கிறேன். ஆசிரியர்கள் இத்தகைய அநாகரீக செயல்களில் ஈடுபடுவதை வன்iமையாக கண்டிக்க வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...