சி.ஏ., முதல்நிலை தேர்வு அறிவிப்பு
Added : ஜன 30, 2018 00:49
'ஆடிட்டர் பணிக்கான, சி.ஏ., முதல்நிலை பொதுத்திறன் தேர்வான, சி.பி.டி., ஜூன், 17ல் நடக்கும்' என, இந்திய சார்ட்டட் அக்கவுன்டன்ட் அமைப்பான, ஐ.சி.ஏ.ஐ., அறிவித்துள்ளது.
ஆடிட்டர் பணியில் சேர, சி.ஏ., பட்டம் பெற வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்களுக்கு தொலைநிலையில், சி.ஏ., படிப்பு நடத்தப்படுகிறது. இதற்கு, மூன்று வித தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல்நிலையில், சி.பி.டி., பொது திறன் தேர்வு; இரண்டாம் நிலையில், மத்திய தேர்வு; மூன்றாவதாக இறுதி தேர்வு நடத்தப்படுகிறது.
இதில், முதல்நிலை, சி.பி.டி., தேர்வு, வரும் ஜூன், 17ல் நடக்கும் என, ஐ.சி.ஏ.ஐ., அறிவித்துள்ளது. தேர்வு எழுத விரும்புவோர், முதலில், அவரவர் மண்டல, ஐ.சி.ஏ.ஐ., அமைப்பில், தங்கள் பெயர் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி, http://icaiexam.icai.org/ என்ற இணையதளத்தில், ஏப்.,4 முதல், 26 வரை, தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும், 196 மையங்களிலும், அபுதாபி, தோஹா, துபாய், காத்மண்ட், மஸ்கட் ஆகிய இடங்களிலும், தேர்வு நடக்கும் என, ஐ.சி.ஏ.ஐ., அறிவித்துள்ளது.
- நமது நிருபர் -

No comments:
Post a Comment