Wednesday, January 31, 2018

அரசு பணிக்கு பணம் கொடுத்து வருபவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள்? -உயர் நீதிமன்றம் கேள்வி
 
விகடன் 

 

'அரசு பணிக்கானத் தேர்வில் பணம் கொடுத்து வருபவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள்? என்ற கேள்வியை கேட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரைகிளை, ''அரசு நடத்திய தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? அந்த வழக்கு விசாரணைகளின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து தமிழக தலைமை செயலர் உட்பட முக்கிய அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தர்விட்டுள்ளது.

ஊடகம் ஒன்றில் TNPSC, TRB, TET, SLET, NET உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் செய்யப்படும் முறைகேடுகள் பற்றிய செய்தி வெளியாகியிருந்தது. ''பணம் கொடுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று பணி பெற முயல்பவர்களின் தேர்வு எழுதும் கோடிங் சீட்டுகள் தனியாக குறியிடப்பட்டு தேர்வு முடிந்த 2 நாட்களில் அதற்கான தரகர்கள் மூலம் சரியான விடைகள் குறிக்கப்பட்டு விடைத்தாள் திருத்தத்திற்கு செல்வது குறித்து விளக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பப்பியுள்ளார். இது போல தவறான வழியில் தேர்வானவர்கள் 19 பேர் அல்ல 270 முதல் 280 பேர் என்பது தெரியவந்துள்ளது. தவறு செய்தவர்கள் தவறான முறையில் மதிப்பெண்களை பெற்றதோடு, தகுதியுடைய நபர்களின் இடங்களையும் பறித்துள்ளனர். இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். முறைகேடுகள் நடப்பதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்று இதை தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'பணம் கொடுத்து பணிக்கு வருபவர்கள் எவ்வாறு நேர்மையாக பணியாற்றுவார்கள்? இது கவனிக்கப்பட வேண்டிய விசயம், நடைபெற்ற எல்லாத் தேர்வுகளிலும் இந்த முறைகேடுகள் நடைபெற்றிருக்குமோ, தொடர்ந்து இது போன்ற தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? அந்த வழக்கு விசாரணைகளின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து தமிழக தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...