Wednesday, October 31, 2018

செல்போனைத் தட்டிவிட்டது தவறு என மக்கள் நினைக்கும் பட்சத்தில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: நடிகர் சிவக்குமார் 

By எழில் | Published on : 30th October 2018 01:04 PM |



தனியார் மருத்துவமனை தொடர்பான விழா ஒன்றில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டபோது அவருடன் இணைந்து செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டார். இந்த விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியான நிமிடம் முதல் சிவக்குமாரின் நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


இந்ந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகர் சிவக்குமார் தெரிவித்ததாவது:

உங்களுடன் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்கொள்கிறேன் என்று அனுமதி வாங்கினால் என்ன? விஐபி என்கிறவர் நீங்கள் சொன்னபடி நிற்கவேண்டும், சொன்னபடிக் கேட்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்விதத்தில் நியாயம்? விமான நிலையங்களிலும் திருமண விழாக்களிலும் எத்தனையோ பேருக்கு செல்போனில் புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்திருக்கிறேன்.

நான் புத்தன் அல்லன். நானும் மனிதன் தான். என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் கதாநாயகன் தான். ஆனால் அடுத்தவர்களை எந்த அளவுக்கு நாம் துன்புறுத்துகிறோம் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் சிவக்குமார் இன்று வெளியிட்டுள்ள விடியோவில் கூறியதாவது:

ஆர்வம் மிகுந்த ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொள்வார்கள். ஒரு பிரபலக் கலைஞர் அதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவக்குமார் செல்போனைத் தட்டி விட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும்பட்சத்தில் என செயலுக்காக உளமாற வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தீபாவளி சிறப்புப் பேருந்துகள்: முன்பதிவு இன்று தொடக்கம்

By DIN | Published on : 31st October 2018 01:43 AM |

சென்னையில் தீபாவளிப் பண்டிகைக்காக, இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன் பதிவு புதன்கிழமை (அக்டோபர் 31) தொடங்குகிறது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல, 20, 567 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நவம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து மட்டும் 4,542 சிறப்புப் பேருந்துகள் உள்பட 11,367 பேருந்துகளும், பிற மாவட்டங்களிலிருந்து 9,200 பேருந்துகளும் என மொத்தம் 20,567 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதேபோல, தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்பு பயணிகள், சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு செல்ல ஏதுவாக நவம்பர் 7 முதல் 10 -ஆம் தேதி வரை சென்னைக்கு 4,207 பேருந்துகள், பிற மாவட்டங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 7,635 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 11,842 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

30 முன்பதிவு மையங்கள்: சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் அக்டோபர் 31-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5 -ஆம் தேதி வரை செயல்படும். இதற்காக, கோயம்பேட்டில் 26, தாம்பரம் சானட்டோரியம் (மெப்ஸ்) பேருந்து நிலையத்தில் 2, பூவிருந்தவல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களில் தலா ஒன்று என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு முன்பதிவு மையங்களை மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை கோயம்பேட்டில் புதன்கிழமை காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார்.

இங்கு பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளைக் காக்க வைத்த விவகாரம்: 2 போலீஸார் ஆயுதப் படைக்கு மாற்றம்


By திருவாரூர் | Published on : 31st October 2018 08:02 AM |

திருவாரூர் அருகே விசாரணை என்ற பெயரில் சுற்றுலாப் பயணிகளை நீண்ட நேரம் காக்க வைத்த சம்பவத்தில் 2 போலீஸார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குடும்பத்தினர், தஞ்சை வரை ரயிலில் வந்து, அங்கிருந்து மினி பேருந்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர், அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு, கங்களாஞ்சேரி வழியாக திங்கள்கிழமை மாலை திரும்பிக் கொண்டிருந்தனர். சோழங்கநல்லூர் பகுதியில் இவர்கள் சென்ற மினி பேருந்தை சோதனைக்காக மதுவிலக்கு போலீஸார் நிறுத்த முயன்றனராம். ஆனால், அந்த பேருந்து நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.


இதனால், சாதாரண உடையிலிருந்த போலீஸார் இருவர், இருசக்கர வாகனத்தில் சென்று, மினி பேருந்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர், பேருந்தை நிறுத்தாமல் சென்றது குறித்து அதன் ஓட்டுநரிடம் தகராறு செய்த போலீஸார், சுற்றுலாப் பயணிகளிடம் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி வைப்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, இரவு 7 மணிக்கு ரயிலுக்குச் செல்ல வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கூறியும், அவர்களை அனுப்பி வைக்காமல், காக்க வைத்தனராம்.

 இந்த சம்பவம் உயர் அலுவலர்கள், மாவட்ட வருவாய் துறையினருக்கு தெரியவந்ததையடுத்து, 4 மணி நேரத்துக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், சோழங்கநல்லூரில் போலீஸார் சாதாரண உடையில் இருந்ததால், "லிப்ட்' கேட்கிறார்கள் என நினைத்து நிறுத்தவில்லை என்றும், இதற்காக பேருந்தில் ஏறிய போலீஸார் முறைதவறி நடந்து கொண்டதுடன், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நீண்ட நேரம் காக்க வைத்தனர் எனத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் இளவரசன், சங்கர் ஆகியோர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ரூ. 300 லஞ்சம் வாங்கிய ஸ்ரீவி., டாக்டருக்கு சிறை : 13 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

Added : அக் 31, 2018 03:33

ஸ்ரீவில்லிபுத்துார்: தலையில் காயமடைந்த பெண்ணுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க பரிந்துரை கடிதம் கொடுக்க ரூ.300 லஞ்சம் பெற்ற ஸ்ரீவில்லிபுத்துார் அரசு டாக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஸ்ரீவில்லிபுத்துார் ரைட்டன்பட்டி தெருவை சேர்ந்தவர் ஜோதிராஜன்,50, மனைவி நல்லம்மாள் . 2005ல் தலையில் காயமடைந்து ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். விருதுநகர் அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு பரிந்துரை கடிதம் கொடுக்க அப்போது முதுநிலை அறுவைசிகிச்சை நிபுணராக பணியாற்றிய டாக்டர் ரமேஷ் ரூ.300 லஞ்சம் பெற்றார். தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.இவ்வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார், டாக்டருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். சம்பவம் நடந்து 13 ஆண்டுகளுக்கு பின் நேற்று தீர்ப்பளிக்கபட்டது குறிப்பிடதக்கது.
நிர்மலாதேவி 'வலையில்' விழுந்தவர்கள் யார் : வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்

Added : அக் 31, 2018 03:46



மதுரை: பேராசிரியை நிர்மலாதேவி தனது வலையில் விழுந்தவர்கள் பற்றி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லுாரி உதவி பேராசிரியையாக இருந்தவர் நிர்மலா தேவி. மாணவியர் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

 இவ்வழக்கில் மதுரை காமராஜ் பல்கலை உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆய்வு மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டனர். வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசில் நிர்மலாதேவி அளித்த வாக்குமூலம்:

 எனக்கும் அருப்புக்கோட்டை சரவணபாண்டியனுக்கும் 1996 ல் திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் பிறந்தனர். கணவர் பி.இ., சிவில் படித்தவர். தெற்கு ரயில்வேயில் கர்நாடகா, கேரளாவில் பணிபுரிந்தார். 2003 ல் சென்னைக்கு மாறுதலானார். கிழக்கு தாம்பரத்தில் வசித்தோம். பக்கத்து வீட்டு பெண்ணுடன், எனது கணவருக்கு பழக்கம் ஏற்பட்டது. மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றேன்.கணவரின் முயற்சியால் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லுாரியில் 2008 ல் கணிதத்துறை உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. 2009 ல் கணவர் ரயில்வேயில் நீண்ட விடுப்பில் சவுதி அரேபியா சென்றார்.

மதுரை காமராஜ் பல்கலையில் 2013 ல் பிஎச்.டி., முடித்தேன். கணவரின் தம்பி மகனுக்கு மொட்டைபோட சங்கரன்கோவில் சென்றோம். திருநெல்வேலி மாவட்ட அறநிலையத்துறை இணை கமிஷனராக இருந்த 'அன்பானவரின்' அறிமுகம் கிடைத்தது. அவருடன் நெருக்கமானேன். அவருக்கும், மனைவிக்கும் பிரச்னை இருந்தது. அவர் என்னை திருமணம் செய்ய விரும்பினார். பிரச்னையால், சென்னைக்கு இடமாறுதலில் சென்றார்.எனது கணவர் சவுதியில் பணியை விட்டுவிட்டு அருப்புக்கோட்டை வந்தார். நகராட்சியில் கான்டராக்ட் பணி செய்தார். நஷ்டத்தால் பண நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கல்லுாரியின் முன்னாள் செயலருடன் நெருங்கி பழகினேன். அவர் 'சவுண்டானவர்' அடிக்கடி பணம் கொடுப்பார்.எனக்கும், கணவருக்கும் இடையிலான பிரச்னையை தீர்க்க வந்த பிஜூ, ரவிச்சந்திரன் மற்றும் சிலருடன் நெருங்கி பழகினேன். இதனால் கல்லுாரியில் யாரும் என்னிடம் சரியாக பேசமாட்டார்கள்.கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நாங்கள் பராமரித்த போது பிரச்னை ஏற்பட்டது.

அப்போது அருப்புக்கோட்டையில் அறநிலையத்துறை ஆய்வாளராக இருந்த 'ஆனந்தமானவருடன்' நெருக்கம் ஏற்பட்டது.பணி தொடர்பாக மதுரை காமராஜ் பல்கலைக்கு சென்றபோது, கட்டுப்பாட்டாளராக இருந்த 'விஜயமானவருடன்' பழகி நெருக்கமாக இருந்தேன். அதே பல்கலையில் 2017 ல் புத்தாக்கப் பயிற்சியில் சேர்வதற்காக வணிகவியல்துறை உதவி பேராசிரியராக இருந்த முருகனை சந்தித்தேன். அவர் அருப்புக்கோட்டைக்கு என் வீட்டுக்கு வந்தார். அப்போது என்னுடன் 'நெருக்கமாக' இருந்தார். பல்கலை புத்தாக்க பயிற்சியில் சேர்ந்தேன்.அப்போது முருகன், 'கல்லுாரி பெண்களிடம் பேசி ஏற்பாடு செய்ய முடியுமா?' என்றார்; 'செய்கிறேன்' என்றேன். அவர் கருப்பசாமியின் தொலைபேசி எண்ணை கொடுத்து, 'பல்கலையில் எந்த உதவி வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ளலாம்' என்றார்.

நான் புத்தாக்கப் பயிற்சிக்கு சென்றபோது, கருப்பசாமியின் அறிமுகம் கிடைத்தது. அவரது சொந்த ஊரான திருச்சுழிக்கு எனது காரில் சென்றோம். வழியில் நிறுத்தி காருக்குள் இருவரும் 'நெருக்கமாக' இருந்தோம்.அப்போது அவர், 'சென்னை செல்கிறோம். அங்கு ஒரு அசைமென்ட் உள்ளது. கல்லுாரி மாணவிகளை ரெடி பண்ணி தருவீர்களா?' என்றார். 'முயற்சிக்கிறேன்' என்றேன்.முருகன், கருப்பசாமி தொடர்ந்து கேட்டு வந்ததால் எனது அலைபேசியிலிருந்து ஒரு மாணவியிடம் பேசினேன். மேலும் சில மாணவியரை மூளைச்சலவை செய்தேன். மாணவிகள் சம்மதிக்கவில்லை. நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன்.

இதை முருகனிடம் தெரிவித்தபோது, 'கவலைப்படாதீர்கள். உதவி செய்கிறேன்' என்றார். பல்கலையின் எச்.ஆர்.டி.சி., இயக்குனராக இருந்த 'கலையானவர்' எனக்கு போன் செய்தார்.அவரிடம், 'கல்லுாரியில் படிக்கும் பெண்கள் வேண்டும் என முருகன், கருப்பசாமி கேட்டதால்தான் இவ்வாறு பேசி மாட்டிக் கொண்டேன்' என்றேன். அவரை எனது காரில் அவரை ஏற்றிக் கொண்டு விருதுநகர் நோக்கிச் சென்றபோது, காரை நிறுத்தி இருவரும் 'நெருக்கமாக' இருந்தோம்.மதுரை காமராஜ் பல்கலையில் எனக்கு துணைவேந்தர், பதிவாளர் என யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது. அவர்களிடம் பேசியது இல்லை. நான் இந்த மாணவிகளைத் தவிர, இதற்கு முன் வேறு எந்த மாணவியையும் இவ்வாறு அழைத்தது இல்லை.இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம்- - சென்னை விமானம் மாலை நேரத்தில் இயக்கப்படுமா?

Added : அக் 31, 2018 03:27

சேலம்: சேலம் - சென்னைக்கு, மாலை நேரத்தில் விமானம் இயக்க, அனுமதி கிடைக்காததால், சிக்கல் உருவாகியுள்ளது. முதல்வர் பழனிசாமி தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சேலம், காமலாபுரத்தில் அமைந்துள்ள விமான நிலையத்தில், ஏழு ஆண்டுகள் இடைவெளிக்கு பின், மார்ச், 25ல், சேலம் - சென்னைக்கு, 'ட்ரூஜெட்' விமான சேவை துவங்கப்பட்டது.மத்திய விமான போக்கு வரத்து அமைச்சகத்தின், 'உதான்' திட்டத்தின் மூலம், 72 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானம், தினந்தோறும் சென்னையில், காலை, 10:20க்கு புறப்பட்டு, 11:10க்கு சேலம் வந்து, இங்கிருந்து, 11:30 மணிக்கு கிளம்பி, 12:20க்கு சென்னை செல்கிறது.ட்ரூஜெட் நிறுவனத்தின் சார்பில், மாலை நேரத்தில், மற்றொரு முறை, இதே விமானத்தை இயக்க, உதான் திட்டத்தில் அனுமதி பெறப்பட்டது

. அக்., 28 முதல், தினமும் மாலை, 4:00 மணிக்கு சென்னையில் புறப்பட்டு, 5:10க்கு சேலம் வந்து, இங்கிருந்து, 5:40க்கு புறப்பட்டு, மாலை, 6:45க்கு சென்னை சென்றடைய திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், விமான போக்கு வரத்து அமைச்சகத்தின் பாதுகாப்பு பிரிவு, இப்பயணத்துக்கு அனுமதி வழங்கவில்லை.சேலம், காமலாபுரம் விமான நிலையம், காடுகளை ஒட்டி இருப்பதால், மேக மூட்டம் மற்றும் வெளிச்சம் குறைவு உள்ளிட்ட காரணங்களால், மாலை, 4:30 மணிக்கு மேல் விமானத்தை இயக்க முடியாத சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, சேலம் சிறு, குறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் மாரியப்பன் கூறியதாவது:மாலை, 5:40க்கு சேலத்தில் இருந்து கிளம்பும் வகையில், மாலை நேர விமான சேவை திட்டமிடப்பட்டிருந்தது.பனிமூட்டம் மற்றும் வெளிச்சமின்மை காரணமாக, மாலை, 4:30 மணிக்கு மேல், விமானத்தை இயக்க, விமான போக்குவரத்து துறை பாதுகாப்பு அலுவலர்கள், அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.விமான நிலைய விரிவாக்கம், மின் விளக்கு வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே, 4:30 மணிக்கு மேல் விமானத்தை இயக்க முடியும். மாலை, 3:00 மணிக்கு சென்னையில் கிளம்பி, 4:30க்குள் சேலத்திலிருந்து கிளம்பும் வகையில், ட்ரூஜெட் நிறுவனம் திட்டமிட்டது.ஆனால், சென்னை விமான நிலையத்தில், அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. மின் விளக்கு வசதி அல்லது, 3:00 மணிக்கு அனுமதி என, இரண்டில் ஏதாவது ஒன்று கிடைத்தால் மட்டுமே, மாலை நேர விமான சேவை சாத்தியம். இது குறித்து நடவடிக்கை எடுக்க, முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை விடுக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
100 பேரை கொன்ற ஆண் நர்ஸ்!

Added : அக் 31, 2018 05:09 |


ஓல்டன்பர்க் : ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், தன் பராமரிப்பில் இருந்த, 100 பேரைக் கொன்றதாக, ஆண் நர்சாக பணியாற்றிய நீல்ஸ் ஹோகெல், 41, நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டான். ஓல்டன்பர்கில் இரண்டு மருத்துவமனைகளில் பணியாற்றிய போது, அவர்களுக்கு ஊசி போட்டு, மாரடைப்பு ஏற்பட வைத்து, அதில் இருந்து காப்பாற்ற முயற்சிப்பது என, விபரீத விளையாட்டில் இவன் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. இவன், 200க்கும் மேற்பட்டோரை கொன்றிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

NEWS TODAY 2.5.2024